ETV Bharat / bharat

வரும் 19இல் மேற்கு வங்கம் செல்லும் அமித் ஷா! - Amit Shah likely to visit West Bengal on Dec 19

டெல்லி: பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா டிசம்பர் 19ஆம் தேதி மேற்கு வங்கத்திற்குச் செல்கிறார்.

Amit Shah to visit West Bengal as BJP, TMC cross swords after attack on Nadda's convoy

author img

By

Published : Dec 11, 2020, 1:42 PM IST

அடுத்தாண்டு மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக பாஜக தேசியத் தலைவர்கள் தொடர்ந்து, மேற்கு வங்கத்தில் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று (டிச. 10) மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பாஜக பொதுச்செயலாளர் விஜய் வர்கியா சுற்றுப் பயணம் மேற்கொண்டனர்.

இதனையடுத்து, டைமண்ட் துறைமுகத்திற்கு இருவரும் சென்றுகொண்டிருந்தபோது, அவர்களது பாதுகாப்பு வாகனம் மீது சரமாரியாக கற்கள் வீசப்பட்டன. பெரிய செங்கல் ஒன்றும்; இந்தப் பாதுகாப்பு வாகனத்தை நோக்கி எறியப்பட்டது. இதில் ஜே.பி. நட்டாவுக்கு எந்தக் காயமும் ஏற்படவில்லை. விஜய் வர்கியாவுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாஜக தலைவர்கள் மீதான இந்தத் தாக்குதலுக்கு அக்கட்சியினர் பலர் கடும் எதிர்ப்பும், கண்டனங்களையும் தெரிவித்தனர்.

இந்நிலையில் வரும் 19, 20ஆம் தேதியில் மேற்கு வங்க மாநிலத்திற்கு பாஜக மூத்தத் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா செல்லவிருக்கிறார். அப்போது அம்மாநிலத்தில் வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜகவினரின் செயல்பாட்டை மேற்பார்வையிடுகிறார்.

இதையும் படிங்க...எச்சரித்தும் செயல்படத் தவறிய மம்தா அரசு - மேற்கு வங்க ஆளுநர் சாடல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.