பிரான்ஸ் நாட்டில் ரஃபேல் விமானாங்களை வாங்க சென்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று தசரா பண்டிகையை முன்னிட்டு, ரஃபேல் விமானாத்திற்கு பொட்டு வைத்து பூஜை புனஸ்காரம் செய்ததற்கு எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியான விமர்சனங்களை முன் வைத்தனர்.
அதில் குறிப்பாக காங்கிரஸ் கட்சி பிரமுகர் சந்தீப் திக்ஷத், விஜய தசமி பண்டிகைக்கும் ரஃபேல் விமானங்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? எதற்காக இதை அதோடு இணைக்க வேண்டும் என்று கேள்வியெழுப்பினார்.
இவரைத் தொடர்ந்து அல்கா லம்பா தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே அந்தோனி அல்லது முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாம் இதுபோன்ற காரியத்தை அவரவர் மத ரீதியாக பைபிள், குரான் ஐதீக முறையில் ராஜ்நாத் செய்தது போல் செய்திருந்தால் என்ன ஆயிருக்கும்? என்று பாஜகவை குற்றம்சாட்டினார்.
இவர் அனைவர் கருத்திற்கும் பதில் அளிக்கும் வகையில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானா மாநிலம் கைத்தாலி மாவட்டத்தில் தேர்தல் பரபரப்புரையில் பேசும் போது, "விஜய தசமியன்று ரஃபேல் விமானங்களுக்கு பூஜை செய்தது காங்கிரஸ் கட்சிக்கு பிடிக்கவில்லை என்றால் அவர்கள் அதனை விமர்சிப்பதா? என்று கேள்வியெழுப்பிய அவர், அவர்கள் விமர்சனம் செய்யும் முன் முதலில் யோசனை செய்ய வேண்டும், எதை விமர்சிக்க வேண்டும் எதை செய்யக் கூடாதென்று" காட்டமாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: சாந்துப்பொட்டு, சந்தனப் பொட்டு - ரஃபேலுக்கு ஃபிரான்சில் ராஜ்நாத் சிங் பூஜை
மேலும் படிக்க: தென்னிந்திய மக்களிடம் உங்கள் பாட்’ஷா’ பலிக்காது: அமித் 'ஷா'வுக்கு ரஜினி பஞ்ச்!