மக்களவைத் தேர்தலுக்காக மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்ஹராவில் அமித் ஷா பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமராக 2014ஆம் ஆண்டு பதவியேற்ற நாள் முதல் இன்று வரை மோடி விடுப்பு எடுக்கவில்லை. மோடி நாட்டு மக்களுக்காக ஓய்வின்றி உழைக்கிறார்.
ஆனால் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியாவில் வெப்பநிலை அதிகரித்தால் வெளிநாடு சென்று விடுகிறார். அவர் எப்படி நாட்டு மக்களை காப்பாற்றுவார் என பாஜக தேசிய தலைவர் அமித் ஷா விமர்சனம் செய்தார்.