குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடெங்கும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் சமீபத்தில், டெல்லி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, குடியுரிமை திருத்த சட்டத்தில் இலங்கை தமிழர்களையும் இணைக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் எனவும் அமித் ஷாவிடம் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்வைத்த இந்தக் கோரிக்கையை மத்திய அரசு கண்டிப்பாக பரிசீலிக்கும் என்றும், சரியான நேரத்தில் இதற்கான சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்படும் எனவும் அமித் ஷா உறுதி அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: நாட்டில் அமைதியை சீர்குலைக்க முயற்சி - அமித் ஷா குற்றச்சாட்டு