மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஒரு நாள் பயணமாக மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா வருகை தந்துள்ளார். அமித் ஷாவுடன் பாஜக தலைவர் ஜே.பி நட்டாவும் கொல்கத்தா வந்துள்ள நிலையில், இருவரையும் மேற்கு வங்க பாஜக மாநிலத்தலைவர் திலீப் கோஷ் வரவேற்றார்.
மத்திய அமைச்சர் அமித் ஷா வருகைக்கு எதிராக மேற்குவங்கத்தில் இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் பெரும் போரட்டம் நடத்த திட்டமிட்டிருந்தனர்.
இந்நிலையில், இன்று காலை கொல்கத்தா நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் திரண்டனர்.
பின்னர் அமித் ஷா விமான நிலையம் வந்திறங்கியவுடன் அங்கு திரண்டிருந்த போராட்டக்காரர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தி கோ பேக் (திரும்பி செல்லுங்கள்) அமித் ஷா என்ற முழக்கம் எழுப்பினர்.
தொடர்ந்து குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். போராட்டக்காரர்களை அங்கிருந்து அப்புறப்படுத்திய காவல்துறையினர் விமான நிலையத்தை தடுப்புகள் வைத்து பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவந்தனர்.
அடுத்தாண்டு மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜவின் யுக்தி குறித்து மாநிலத் தலைவருடன், அமித் ஷாவும், ஜே.பி. நட்டாவும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
இதையும் படிங்க: பிகார் முதலமைச்சருக்கு பிரதமர் மோடி வாழ்த்து!