நாடாளுமன்றத்தில் நடைபெற்றுவரும் குளிர்கால கூட்டத் தொடரில், நாட்டின் முக்கிய தலைவர்களுக்கு வழங்கப்படும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு படை சட்டத் திருத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.
1985ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பிறகு, அவர் குடும்பத்துக்கும், பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் பாதுகாப்புக்காக எஸ்.பி.ஜி. (Special Protection Force) சிறப்புப் படை பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.
அது குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கவுரவ் கோகாய்கு (Gaurav Gogoi) எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் அமித் ஷா, "பிரதமர் நரேந்திர மோடி வெளிநாடுகளின் சுற்றுப்பயணத்தின் போது அவரோடு எஸ்.பி.ஜி. என்னும் பாதுகாப்பு படையினர் 20க்கும் குறைவானவர்களை அழைத்துச் செல்கிறார்.
மேலும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை கழிப்பறை கொண்டு விடுவதற்கும் எஸ்.பி.ஜியினர் கூடவே வருவார்கள். இருந்தாலும் கூட ராஜ்நாத் உள்ளிட்ட அமைச்சர்கள் பாதுகாப்புப் படையினரை முறையாக பயன்படுத்தி கொள்கின்றனர். ஆனால் காந்தி குடும்பம் அதை மதிக்காமல் இருந்து வருவது ஏற்புடையது அல்ல.
2015ஆம் ஆண்டில் இருந்து ராகுல் காந்தி வெளிநாடு செல்லும்போது எஸ்.பி.ஜியினரிடம் தெரிவிப்பதில்லை. இதுபோல் ஆயிரத்து 892 முறை டெல்லிக்கு சென்றபோதும் 247 முறை வெளிநாடு பயணத்தின்போதும் தெரியப்படுத்தவில்லை. காந்தி குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக 600 முறை எஸ்பிஜி உதவியை புறக்கணித்துள்ளனர்" என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் படிக்க: கோட்சேவை 'தேசபக்தன்' எனக் கூறியதால் பிரக்யாவின் பதவி பறிப்பு