தலைநகர் டெல்லியில் நடந்த பாஜக கூட்டத்தில் கலந்துகொண்ட அமித் ஷா, குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து பேசினார். அப்போது ராகுலும், பிரியங்காவும் நாட்டு மக்களைத் தவறாக வழிநடத்துவதாகக் குற்றஞ்சாட்டினார்.
தொடர்ந்து பேசிய அமித் ஷா, “குடியுரிமை திருத்தச் சட்டத்தால் எந்தவொரு சிறுபான்மையினரும் குடியுரிமை இழக்க மாட்டார்கள். மாறாக மூன்று அண்டை நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மையினர் குடியுரிமை பெறுவார்கள்” என்றார்.
மேலும் இதே குற்றச்சாட்டை டெல்லி மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீதும் முன்வைத்தார். இது குறித்து அவர், "அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் ஏராளமான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்துவிட்டார். நாட்டு மக்களை ஒருமுறை தவறாக வழி நடத்திவிட்டார்கள். ஆனால் அனைத்து நேரமும் இது நடக்காது. டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிக்கு வரும்” என்றார்.
இதையும் படிங்க: ராம், ரஹிம், ராபர்ட் எல்லோரும் இந்தியர்களே - நெகிழ்ச்சியை ஏற்படுத்திய கல்யாணப் பரிசு!