ETV Bharat / bharat

கரோனா நெருக்கடியிலும் தென் சீனக் கடலில் ஆதிக்கம் செலுத்தும் சீனா!

உலக நாடுகள் அனைத்தும் கரோனா பெருந்தொற்றுக்கு எதிராகக் கடுமையாகப் போராடிவரும் நிலையில், தென் சீனக் கடலில் சீனா தனது வல்லாதிக்கப் போக்கைத் தொய்வின்றி தொடர்வது சர்வதேச சமூகத்தின் பொறுமையைச் சோதிப்பதாக அமைந்துள்ளது. தனது எல்லைகளைத் தன்னிச்சையாக விரிவாக்கும் நடவடிக்கைகளால், தென் சீனக் கடலை ஒட்டியுள்ள அனைத்து நாடுகளுடனும் சீனாவுக்கு எல்லை குறித்த பிரச்சனை முடிவின்றி தொடர்கிறது.

சீனா
சீனா
author img

By

Published : Jul 13, 2020, 2:17 PM IST

பனிப் பாலைவனமான கிழக்கு லடாக் பகுதியில் இந்திய எல்லையில் ஊடுருவிய சீனப் படைகள், இந்திய ராணுவத்துடன் மோதலில் ஈடுபட்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்கும் பதற்றமான சூழலிலும், தென் சீனக் கடலில் தனது கடற்படை நடவடிக்கைகளை சீனா கைவிடவில்லை. கடந்த வாரம், சீன கடற்படை இந்தக் கடற்பகுதியில் போர் ஒத்திகை மேற்கொண்டது. அந்தப் பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் எதிர்வினை

சீனாவின் சமீபத்திய செயல்பாடுகளுக்கு எதிர்வினையாக, அமெரிக்கா அணுசக்தியால் இயங்கும் விமானம் தாங்கி போர்க் கப்பல்களை அங்கு நிலைநிறுத்தியுள்ளது, கூடுதல் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. சீனாவின் தன்னிச்சையான எல்லை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

”இமயமலையின் பள்ளத்தாக்குகள் மற்றும் மலைமுகடுகள் முதல் தென்சீனக் கடலில் வியட்நாமின் பொருளாதார மண்டலம், ஜப்பானை ஒட்டியுள்ள கிழக்கு சீனக் கடலின் சென்காக்கு தீவுகள் என இவற்றுக்கும் அப்பால் பெய்ஜிங் எல்லை தாவாவை கிளப்புவதில் ஒரு திட்டமிட்ட செயல்பாடு இருக்கிறது. இத்தகைய மிரட்டல்கள் தொடர உலகம் அனுமதிக்கக் கூடாது” என்று கடந்த வாரம் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சீனாவின் பதிலடி

ஆனால், கடந்த புதன்கிழமையன்று சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடாகக் கருதப்படும், ’குளோபல் டைம்ஸ்’, சீனாவின் கடல் எல்லையில் அமெரிக்கப் போர் விமானங்களின் நடமாட்டம் குறித்து செய்தி வெளியிட்டது. ’ஐந்து அமெரிக்க வேவு விமானங்கள் சீனாவின் தென் மண்டலமான குவாண்டாங்கையொட்டி தொடர்ச்சியாக மூன்று நாள்கள் பறந்தன’ என்று பெய்ஜிங்கில் உள்ள புவிசார் அரசியல் ஆய்வாளர்களை மேற்கோள்காட்டியுள்ளது அந்த நாளேடு.

”அமெரிக்காவின் ஆத்திரமூட்டும் செயல்களுக்குத் தகுந்த பதிலடியாக, சீன ராணுவமும் போர் விமானங்களை அனுப்பி, சீன வான் எல்லையிலிருந்து அமெரிக்க வானூர்திகளை விரட்டியடிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குளோபல் டைம்ஸ் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீன ஆக்கிரமிப்பும் தென்கிழக்காசியாவும்

”அமெரிக்கா தனது போர்க்கப்பல்களை தென் சீனக் கடலில் நிறுத்தியிருப்பது தெரிவிக்கும் செய்தி, இந்த பிராந்தியத்தில் பெய்ஜிங் இனியும் ஆக்கிரமிப்பை மேற்கொள்ளக் கூடாது என்பதே” என கூறுகிறார் அப்சர்வர் ஆய்வு மையத்தின் அபிஜித் சிங். “அண்மைக் காலமாக, சீன கடற்படையைச் சாராத கடல்சார் ஆயுதக் குழுக்களின் செயல்பாடுகள் இந்தப் பகுதியில் மிகவும் அதிகரித்துள்ளது. இதில் ஒளிவு மறைவு இல்லை. இதனால், தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பைச் (ASEAN) சேர்ந்த நாடுகள் அமெரிக்க மற்றும் ஜப்பானின் உதவியைக் கோரியுள்ளன,” என்று ஈடிவி பாரத்-க்கு அளித்த நேர்கானலில் அவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் எல்லை விரிவாக்கப் போக்கு திடீரென முளைத்ததல்ல, நடக்கவிருந்த ஒன்றுதான், என கருத்து தெரிவிக்கிறார் டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியரான பி ஆர் தீபக். அவரது பார்வையில், “1979 முதல் சீனாவின் நோக்மெல்லாம் மேம்பட்ட வளர்ச்சிக்கான பொருளாதார சீர்திருத்தத்திலேயே இருந்தது. 2012ல் ஷி ஜிங்பிங் அதிபராக பதவியேற்றதிலிருந்து, புதிய நம்பிக்கை பெற்ற தேசமாக வல்லாதிக்க விரிவாக்கக் கொள்கையைக் கையிலெடுத்து, அதற்கு அழுத்தமும் முக்கியத்துவமும் அளித்தது.

ஆனால், லடாக் எல்லை பதற்றம் தொடரும் நிலையில், இந்தியா தென்சீனக் கடலில் கப்பல் போக்குவரத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது சீனாவுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தி இருக்கும்.

இந்தியாவும் தென் சீனக் கடலும்

தென்சீனக்கடலில் கப்பல் போக்குவரத்து தொடங்க, இந்தியாவுக்கு அழைப்பு விடுத்த பிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லொரென்சா, சீன இராணுவத்தின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் குறித்து கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ தூதெர்த்-உடன் தொலைபேசி வழியாக உரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் முதல் ஆப்பிரிக்காவரை பரந்து விரிந்துள்ள இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பிலிப்பைன்ஸ்-ஐ முக்கிய பங்காளியாக இந்தியா கருதுவதாக எடுத்துரைத்தார்.

தென் சீனக் கடலில் இந்தியாவுக்கு நேரடி பாதிப்பு இல்லை என்றாலும், சீனாவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை ஏற்புடையதல்ல. எனவே, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகியவற்றுடன் இணைந்து நால்வர் அணியாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் அமைதியும் நிலத்தன்மையும் நிலவ இந்தியா செயல்படுகிறது. ”இமாலய எல்லைப் பகுதியில் சீனாவின் செயல்பாட்டை ஒட்டி, இந்தியா தென்சீனக் கடல் பிரச்சனையில் தீவிர நிலைப்பாட்டை மேற்கொள்ள வாய்ப்புள்ளது,” என்று அபிஜித் சிங் கூறுகிறார்.

தென் சீனக் கடல் உலகின் முக்கியமான சரக்குப் போகுவரத்து நடைபெறும் பிராந்தியம் ஆகும். மேலும், மீன்வளம், எண்ணெய் – இயற்கை எரிவாயு வளம் ஆகியவற்றுடன் இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

சீனாவும் தென்கிழக்கு ஆசியாவும்

இதனால், தென்கிழக்காசிய நாடுகளின் தலைவர்கள் சீனாவின் ஆக்கிரமிப்பு செயல்பாடுகள் தொடர்வதை மிகுந்த கவலையுடன் நோக்குகின்றனர். கடந்த மாதம் நடைபெற்ற இணியவழி ஆசியான் மாநாட்டில் உரையாற்றிய வியட்நாம் பிரதமர் ங்குயென் ஷுவான் ஃபுக் கூறியது: “உலக நாடுகள் யாவும் கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக செயல்படும் நிலையில், சர்வதேச் சட்டங்களை துச்சமாக எண்ணி மீறிவருவது, எமது பிராந்தியம் உள்ளிட்ட சில பிராந்தியங்களின் பாதுகாப்புக்குக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.”

தென் சீனக் கடலில் சீன ஆக்கிரமிப்புக்கு உள்ளானவற்றுள், முக்கியமானவை ஸ்ப்ராட்லி தீவுகள் மற்றும் பாரசெல் தீவுகள். ஸ்ப்ராட்லி தீவுக்கூட்டத்திற்கு புருனே, மலேசியா, பிலிப்பைன்ஸ், தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் சொந்தம் கொண்டாடுகின்றன. தைவானும் வியட்நாமும் பாரசெல் தீவுக்கூட்டத்திற்கு உரிமை கோருகின்றன.

1974-வரை வியட்நாமின் ஆளுகையில் இருந்த பாரசெல் தீவுகளை இராணுவத்தின் மூலம் கையகப்படுத்திக் கொண்டது, என்கிறார் பேராசிரியர் தீபக். “இப்போதும், ஸ்ப்ராட்லி தீவுகளில் பெரும்பாலனவை (28), வியட்நாமின் கீழ் உள்ளன. ஆனால், அவற்றைத் தனதாக்கிக் கொண்டு, யதார்த்தத்தை எற்றுக்கொள்ளச் செய்வதே சீனாவின் தந்திரம்,” என விளக்குகிறார்.

சர்வதேச சட்டம் மற்றும் ஒப்பந்தங்களை மீறும் சீனா

சர்வதேச நீதிமன்றத்தில், சீனாவுக்கு எதிராக 2016இல் பிலிப்பைன்ஸ் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது. ஆனால், சீனா தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. தென்கிழக்காசிய நாடுகள், குறிப்பாக, வியட்நாம் மற்றும் பிலிப்பைன், சீனா, தென் சீனக் கடலில் தனது கடல் எல்லையைத் தாண்டி, சர்வதேச கடல் பகுதியில் கடற்படை ஒத்திகை நடத்திவருவதை அச்சத்துடன் நோக்குகின்றன. காரணம், சீனாவின் போக்கு, எல்லை தாவாக்களை பிரயோகமின்றி அமைதி வழியில் தீர்வு காண 2002இல் பெய்ஜிங், ஆசிய நாடுகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தை மீறுவதாக உள்ளது.

ஆனால், பேராசிரியர் தீபக் பார்வையில், சீன, ஒவ்வொரு நாட்டுடனும் தனியாக பேச்சுவார்த்தை மேற்கொள்ள தயாராக உள்ளபோதும், ஆசிய நாடுகள் அனைத்தும் ஒட்டுமொத்தமாக இணைந்து சீனாவுடன் தீர்வு காண்பதை விரும்புகின்றன.

சீனாவின் அச்சம்

“சிக்கல்கள் இருந்தபோதும், ஆசிய நாடுகளுடனான உறவைப், சீனா புறந்தள்ள இயலாது. காரணம், 600 பில்லியன் டாலர் வர்த்தகம். இதற்கு குந்தகம் வரக்கூடாது என்ற அதீத அச்சத்தினால்தான், அமெரிக்கா போன்ற வல்லரசு இந்தப் பிராந்தியத்தில் காலூன்றக் கூடாது என்பதில் தீவிரம் காட்டுகிறது சீனா” என்று அவர் விளக்குகிறார்.

மேலும், ’மலக்கா சிக்கல்’ என முன்னாள் சீன அதிபர் ஹு ஜிண்டாவோ கூறியுள்ளது சீனாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்துகிறது. மலேசியாவுக்கும், இந்தோனேசியாவின் சுமத்ரா தீவுக்கும் இடையே உள்ள குறுகலான மலாக்கா நீரினை தென் சீனக் கடலை இணைக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளதால், எந்தச் சமயத்திலும் அது அடைக்கப்பட்டால், வளைகுடா நாடுகளில் இருந்தும் ஆப்பிரிக்காவில் இருந்தும் வரும் சீனாவுக்கான எண்ணெய் - எரிவாயு இறக்குமதி கடுமையாகப் பாதிக்கப்படும்.

இந்தச் சூழலில், அமெரிக்கா தனது போர்க் கப்பல்களை தென் சீனக் கடலில் நிலைநிறுத்துவது, அந்தப் பிரந்தியத்தில் பதற்றத்தை அதிகரிப்பதுடன்ம், ஏற்படுத்தவிருக்கும் விளைவுகள் என்னவென்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க: மோடியின் ஆட்சியில்தான் சீனா ஆக்கிரமிப்பு செய்தது - ராகுல் காந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.