ETV Bharat / bharat

வாட்ஸ் அப் காணொலியால் இல்லறமேற்ற இளம் ஜோடி

author img

By

Published : Apr 30, 2020, 9:23 PM IST

திருவனந்தபுரம்: ஊரடங்கால் லக்னோவில் சிக்கிக்கொண்ட மணமகளுக்கும், கேரளாவில் இருக்கும் மணமகனுக்கும் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலம் திருமணம் நடைபெற்றது. இதில், மணமகன் ஸ்ரீஜித், செல்போனுக்கு தாலி கட்ட, மணமகள் தனது கையில் வைத்திருந்த தாலியை கட்டிக்கொள்ளும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

wedding
wedding

இந்த லாக்டவுன் நேரத்தில் காதலர்கள் காதலோடு தனிமையில் பிரிந்து வாடுவது மிகவும் சிரமம் தான். சிலருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு தங்களது இணையரோடு சேர முடியாமல் மனதிலே வரைந்திருக்கும் காதல் ஓவியத்திற்கு ஆறுதல் சொல்லியும் தீர்க்க முடியாது. வாட்ஸ் அப் வீடியோவில் நலம் விசாரிக்கலாம். தூரத்தில் தனிமையோடு இருக்கும் காதலர்கள், தங்களது காதல் முத்தங்களை கவிதைகளால் வருணித்து பேசலாம். திருமணம் செய்து கொள்வது?.

திருமணம், உணர்வுகளுக்கும் போலிகளை நிஜமாக்கும், ஆனந்தக் கண்ணீரை பரிசுகளாய் தரும் விழா. ஆனால், கேரளாவில் நடந்திருப்பது நம்மை எல்லோரையும் வியக்க வைத்துள்ளது.

கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீஜித் நடேசனுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த அஞ்சனா என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அஞ்சனா உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மென்பொறியாளராக பணியாற்றி வருகிறார். ஸ்ரீஜித் நடேசன் வங்கி அலுவலராக கேரளாவில் பணியாற்றி வருகிறார். இருவருக்கும் ஜனவரி மாதம் நடைபெறவிருந்த திருமணம், ஏப்ரல் மாதம் தள்ளிவைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், லக்னோவில் உள்ள அஞ்சனா திருமணம் நிச்சயிக்கப்பட்ட தேதிக்கு கேரளாவிற்கு வரமுடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் இருவீட்டாரும் ஏமாற்றம் அடைந்தனர். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு திருமணம் நடத்துவதற்கான நல்ல தேதி இல்லை என சோதிடர் கூறியதால் திருமணத்தை ஒத்தி வைக்க முடியாமல் இருவீட்டாரும் கலந்து ஆலோசித்ததில் புது சிந்தனை உதித்தது.

இதுகுறித்து கூறிய மணமகள் அஞ்சனா, "நான் ஏப்ரல் 18 ஆம் தேதி கேரளாவுக்கு செல்வதற்காக டிக்கெட் முன்பதிவு செய்திருந்தேன், ஊரடங்கு உத்தரவால், விமான சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டன. இரு வீட்டாரும் நல்ல நாளை தவறவிட விரும்பவில்லை, திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவு செய்தோம்" என்று கூறினார்.

காதலுக்காக அமெரிக்கா செல்லும் ஹீரோக்களை ரசித்து பார்த்திருப்பதுண்டு. அதேபோன்று தான் ஸ்ரீஜித்-அஞ்சனாவின் திருமணமும் பலரது மனதையும் வென்றுவிட்டது என்றே கூறலாம். 2000 கிலோ மீட்டருக்கு அப்பால் இருக்கும் மணப்பெண்ணின் கழுத்தில், மணமகன் கோலத்திலிருந்த ஸ்ரீஜித் மங்கள வாத்தியங்கள் இசைக்க வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக செல்போனுக்கு தாலி கட்ட, அஞ்சனா தனது கையில் வைத்திருந்த தாலியை கழுத்தில் கட்டிக்கொண்டார். இரு வீட்டாரும் அட்சதை தூவி வாழ்த்து தெரிவித்தனர்.

தற்போது தொழில்நுட்பத்தின் மூலம் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட காணொலி காட்சி இணையத்தில் வைரலாகி பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது. இவர்களது திருமணம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு, மனதால் கணவன் மனைவியாக இணைந்து நினைவுகளில் வாழ்ந்து வருகின்றனர். நடேசனும், அஞ்சனாவும், ஊரடங்கு தளர்த்தப்பட்டதும், திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த காத்திருக்கிறார்கள்.

ஒரு வீடியோ அழைப்பு மூலம் தம்பதி தங்கள் திருமணத்தை உறுதிப்படுத்தியது முதல் முறை அல்ல. இந்த ஊரடங்கு நேரத்தில் பல திருமணங்கள் நடந்தேறியுள்ளன. கடந்த மாதம், பாட்னாவின் சதியா நஸ்ரின் உத்தரப்பிரதேசத்தின் டேனிஷ் ரஜா ஆகியோர் வீடியோ அழைப்பின் மூலம் நிக்கா (இஸ்லாம் திருமண உறுதிமொழி) செய்திருந்தனர்.

இதையும் படிங்க: கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த உதவும் ரெமடிசிவர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.