ETV Bharat / bharat

பெண்கள் கடத்தப்படுவது அதிகரிப்பு - சக்தி பஹினி எச்சரிக்கை! - பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல்கள் அதிகரிப்பு

டெல்லி : கோவிட்-19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடு முழுவதும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை குறிவைத்து கடத்தப்படுவது அதிகரித்துவருவதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

பெண்களை கடத்தப்படுவது அதிகரிப்பு - உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை!

author img

By

Published : Jul 17, 2020, 6:29 AM IST

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல்கள் தொடர்பாக விழிப்புணர்வுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் கடிதம் ஒன்றை எழுதியுள்ளதாக அறிய முடிகிறது. இது தொடர்பாக சக்தி பஹினி அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ரிஷி காந்த்திடம் பேசியபோது, "மனித கடத்தலுக்கு எதிராக செயல்படும் ஒரு அரசு சாரா அமைப்பான சக தி பஹினி, பெண்களுக்கு எதிரான கொடுமைகளை மக்கள் மயமாக்க தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறது.

ஐ.நா சபையின் அறிக்கையின்படி, கோவிட்-19 அச்சுறுத்தல் எல்லை தாண்டிய பயணங்களை, மனித கடத்தல்களை அதிகரிக்க ஒருவகையில் வழிவகுத்துள்ளதாக அறிய முடிகிறது. கரோனா நெருக்கடி உலகளாவிய பொருளாதார வீழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில், பெரும் மக்கள் கூட்டத்தினர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். பல்வேறு நாடுகளின் சமச்சீரற்ற வாழ்வாதார நிலையை சீர்செய்ய மனித இடப்பெயர்வுகள் அதிகரித்து வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, இந்தியாவில் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பலர் வேலை இழந்துவிட்டனர். இதனை வாய்ப்பாக பயன்படுத்தும் சமூக விரோத கும்பல்கள் பணம், வேலைவாய்ப்பு, பிற வசதிகளை ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி ஏழை எளிய மக்களிடம் ஆசை வார்த்தைகளைக் கூறி அவர்களை தங்கள் வசமாக்குகின்றனர்.

தங்களது ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாறும் அவர்களை, அதிலும் குறிப்பாக பெண்களை பாலியல் வர்த்தகச் சந்தைகளில் விற்பனை செய்கின்றனர். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளை சதை வர்த்தகத்தில் கட்டாயப்படுத்தி தள்ளிவிடுகின்றனர். அஸ்ஸாம், மேற்கு வங்கம், ஒடிசா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களைச் சேர்ந்த சமூக விரோத கும்பல்கள் இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.

கரோனா பரவலைத்தொடர்ந்து இயற்கை பேரிடர்களை கண்ட மேற்கு வங்கம், ஒடிசா, அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் இந்த கடத்தல்கள் மோசமான நிலையை எட்டியுள்ளது. மேற்கு வங்கத்தில் கடந்த மூன்று மாதங்களில் 138 குழந்தை திருமண வழக்குகள் நடைபெற்று மேற்கு வங்க மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அந்த பெண் குழந்தைகளில் பலர் (அவர்களில் பலர் மாநிலத்திற்கு வெளியே சென்றனர்) சதை வர்த்தகத்தில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்டு இருக்கலாம் என நாங்கள் அச்சப்படுகிறோம். பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் காணாமல் போன வழக்குகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. அவர்கள் சதை வர்த்தகத்திற்கு தள்ளப்பட்டிருக்க கூடும் என சந்தேகப்படுகிறோம்.

வேலைவாய்ப்பு இல்லாத சூழலில் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் குடிபெயர்ந்த தொழிலாளர்களில் பலர் இத்தகைய கொடூரங்களை செய்யும் சமூக விரோத கும்பல்களின் கைகளில் சிக்க அதிக வாய்ப்புள்ளது. சில சந்தர்ப்பங்களில், உள்ளூர் கும்பல்களிடம் மட்டுமல்ல சர்வதேச கடத்தல்காரர்களின் வசமும் அவர்கள் சிக்கலாம்.

வங்கதேசத்தின் தலைநகர் டாக்காவில் திங்களன்று சட்ட அமலாக்க அமைப்புகளால் கைது செய்யப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த கடத்தல்காரன் அசாம் கான், தனது உதவியாளர்களால் நடத்தப்படும் மூன்று பெரிய பாலியல் சந்தைகளில் ஆதரவற்ற பெண்கள் இருப்பதாக ஒப்புக்கொண்டதை இங்கே நாம் கவனிக்க வேண்டும். கடத்தல்காரன் அசாம் கானிடம் நடைபெறும் கூட்டு விசாரணையில், இந்த கடத்தல்கள் குறித்த பல விவரங்களை வெளிப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

பாலியல் தொழில் செய்யும் பல விடுதிகளுக்காக எல்லை தாண்டிய மனித கடத்தலில் ஈடுபட்ட ஹைதராபாத்தைச் சேர்ந்த வங்கதேச தம்பதியரை (அப்துல் சலாம் மற்றும் சிவூலி கட்டூன்) மே மாதம் என்ஐஏ கைது செய்தது குறிப்பிடத்தக்கது. நாடு முழுவதும் அதிகரித்துவரும் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் கடத்தல்கள் குறித்து முறையாக ஆய்வு செய்யப்பட வேண்டும். அவற்றை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரணை செய்ய வேண்டுமென நாங்கள் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளோம்" என அவர் கூறினார்.

கடந்த 2011ஆம் ஆண்டு முதல் முதல் 2019ஆம் ஆண்டுவரை வரை இந்தியாவில் 38,503 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற பதிவு பணியகத்தின் (என்.சி.ஆர்.பி) தகவல்கள் தெரிவிக்கின்றன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.