உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள பவன்ஸா கிராமத்தில், கடந்த இரண்டு நாள்களாக 15 குரங்குகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், இச்சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறுகையில்," குரங்குகளிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனையில் கல்லீரல் , சிறுநீரக கோளாறு இருப்பது உறுதியாகியுள்ளது. ஒரு வேளை விவசாயிகள் விவசாயத்திற்காக தயாரித்த பூச்சிக்கொல்லி கலந்த நீரை குரங்குகள் குடித்திருக்கலாம் என கருதப்படுகிறது.
குரங்குகளின் உடல்நிலை வெப்பம் அதிகமாக காணப்பட்டதால் நிமோனியா காய்ச்சலால் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றோம். இதுதொடர்பாக, குரங்குகள் உயிரிழப்புக்கு உண்மையான காரணம் என்ன என்பது, பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து உடற்கூறாய்வு அறிக்கை வந்தப் பின்னரே தெரியவரும்" என்றனர்.
இதையும் படிங்க: கரோனா வைரஸ் போன்று நாட்டில் தோன்றிய புது வைரஸ்!