ETV Bharat / bharat

ஆறு நாட்களில் 19 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டிய அமேசான், ஃப்ளிப்கார்ட்!

இந்த வருட விழாக்கால விற்பனையில் அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்கள் சந்தைகளில் 90 சதவிகிதம் பங்குகளின்மேல் ஆதிக்கம் செலுத்தி, மொத்தம் 19 ஆயிரம் கோடி ரூபாய்வரை வருமானம் ஈட்டி சாதனைப் புரிந்துள்ளதாக, பெங்களூரைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ரெட்ஷீர் கன்சல்டன்சி தெரிவித்துள்ளது.

Flipkart Amazon generated 19000 crores
author img

By

Published : Oct 9, 2019, 7:08 PM IST

இந்த வருடம் செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 4 வரையிலான விழாக்கால சீசன் விற்பனையில் வருமானம் ஈட்டி இணைந்து மொத்த விற்பனை மதிப்பாக 19 ஆயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி சாதனை புரிந்துள்ளது.

இந்த ஆறு நாட்களில், வால்மார்ட் நிறுவனத்தைச் சேர்ந்த ஃப்ளிப்கார்ட்டும் அமேசானும் 90 சதவீதம் பங்குகளைத் தாண்டி ஆதிக்கம் செலுத்தியதாக பெங்களூரைச் சேர்ந்த ஆராய்ச்சி நிறுவனமான ரெட்ஷீர் கன்சல்டன்சி கூறியுள்ளது. இதில் மொத்த விற்பனை மதிப்பினைக் கொண்டு கணக்கிடும்போது ஃப்ளிப்கார்ட் நிறுவனம் 60 - 62 சதவிகிதத்துடன் விற்பனையில் தொடர்ந்து முன்னிலை வகித்துள்ளது. அனைத்துவகைப் பொருட்களின் விற்பனையிலும், முக்கியமாக மொபைல் விற்பனையில், சரியான விலைகளை நிர்ணயித்ததாலும், அதிக அளவிலான EMI வசதிகளை வழங்கியதாலும் ஃப்ளிப்கார்ட் இந்த விற்பனையில் முதன்மை வகித்ததாக ரெட்ஷீர் நிறுவனம் கூறியுள்ளது.

ஆனால் இந்தப் புள்ளிவிவரங்களை அமேசான் நிறுவனம் மறுத்துள்ளது. நாம் இதுபோன்ற முறையற்ற, ஊகங்களின் அடிப்படையிலான, வலுவற்ற செய்திகளை நம்பி கருத்துத் தெரிவிக்க முடியாது என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. 1,90,000 டிஜிட்டல் பயனாளிகள், ஐம்பதிற்கும் மேற்பட்ட நகரங்களிலிருந்து இந்த விழாக்கால சீசனில் பொருட்களை வாங்கியுள்ளனர். அமேசான்தான் 51 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் விற்பனை சதவிகித்துடன் முதலிடம் வகித்துள்ளது எனப் புள்ளிவிவரங்களுடன் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இதேபோன்று ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் இந்த வருட பிக் பில்லியன் விழாக்கால விற்பனையில் சென்ற வருடத்தைக் காட்டிலும், 50 சதவிகித புதியப் பயனாளிகள் இணைந்துள்ளதாகவும், ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் சிறு, குறு நகரங்களிலிருந்து இணைந்துள்ளதாகவும், மூன்றாம் கட்ட நகரங்களிலிருந்து 100 சதவிகிதம்வரை விற்பனை அதிகரித்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: டிசம்பர் 31ஆம் தேதி வரை பதியப்படும் வாகனங்களுக்கு சாலை வரி 50% குறைப்பு!

Intro:Body:

body:

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.