கார்ப்பரேட் வரியைக் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதையடுத்து இன்று பங்குச்சந்தைகள் ஏற்றம் கண்டது. இதனால் நிதியமைச்சரின் நடவடிக்கையால்தான் பங்கு சந்தை பத்து ஆண்டுகளில் இல்லாத அளவு ஏற்றம் கண்டுள்ளது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார். இதற்கு தொழிலதிபர்களும் வரவேற்பு தெரிவித்தனர்.
இது குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். அதில், ’ஒரே வியப்பாகத்தான் இருக்கிறது. பங்குச்சந்தையை உயர்த்த பிரதமரால் இவ்வளவு செய்ய முடியுமா?’ எனக்கிண்டலடித்துள்ளார்.
மேலும், 'உலகிலேயே மிகவும் ஆடம்பரமாக நடக்கும் ஹவுடி மோடி (Howdy Modi) நிகழ்ச்சியால், 'ஹவுதி மோடி' உருவாக்கிய பொருளாதார குழப்பம் என்ற உண்மை நிலையை மறைக்க முடியாது' எனவும் அதில் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பேசி வருகிறார், அந்நிகழ்ச்சியின் பெயர் ஹவுதிமோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க....அமெரிக்கா பறக்கும் மோடியின் பயண அட்டவணை!