ETV Bharat / bharat

காங்கிரஸ் தலைமை போட்டிக்கு நானா...! அமரீந்தர் சிங் கருத்து

டெல்லி: பாஜகவை தோற்கடிக்க இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து வலுவான தலைமையே சரியாக இருக்கும் என பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

Amarinder
Amarinder
author img

By

Published : Aug 23, 2020, 9:50 PM IST

காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (ஆக.24) நடைபெற உள்ள நிலையில், கட்சியின் இடைக்கால தலைவர் பதவியிலிருந்து விலக சோனியா காந்தி விருப்பம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியிலிருந்து ராகுல் காந்தி விலகினார்.

இதையடுத்து, இடைக்கால தலைவராக சோனியா பதவி வகித்து வந்தார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இந்நிலையில், முழு நேர புதிய தலைவரை நியமிக்கக் கோரி செயற்குழு உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மத்திய முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் சோனியாவுக்கு கடிதம் எழுதினர். மேலும், காந்தி - நேரு குடும்பத்திலிருந்து யாரும் தலைமைக்கு மீண்டும் வரக்கூடாது என கோரிக்கையும் எழுந்தது.

இதனிடையே, பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் தலைவராக வரவேண்டும் என்று ஒரு சில காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.

இதுகுறித்து அமரீந்தர் சிங் கூறுகையில், ”தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றிக்கு காரணம் ஒருங்கிணைந்த வலுவான எதிர்க்கட்சிகள் இல்லாததே. எனவே இந்த சமயத்தில் தலைமையை மாற்றி கட்சியை மாற்றியமைக்க வேண்டும் என்ற சிந்தனை காங்கிரஸ் கட்சிக்கு சிக்கல்களையே தோற்றுவிக்கும்.

ஒருங்கிணைந்த வலுவான தலைமையுடைய காங்கிரஸ்தான் நாட்டையும் மக்களையும் காப்பாற்ற முடியும். சோனியா காந்தி காங்கிரஸை அவர் விரும்பும் வரை தொடர்ந்து வழிநடத்த வேண்டும். ராகுல் காந்தி கட்சியை வழிநடத்த முழு திறமை வாய்ந்தவர் என்பதால் அவர் பொறுப்பேற்க வேண்டும். பாஜக தோற்கடிக்க இந்திரா காந்தி குடும்பத்திலிருந்து வலுவான தலைமையே சரியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க:தொடர் தோல்வியில் காங்கிரஸ், அதிரடி காட்டுமா தலைமை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.