மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த மாதம் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, பாஜக அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளதைக் காட்டுவதாகக் கூறி, புதுச்சேரி அஞ்சல் நிலையம் அருகே அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், புதிய வேலைவாய்ப்புக்கான உத்தரவாதம் எதுவும் இல்லை என்றும், விவசாயிகள் தற்கொலையை தடுப்பதற்கான திட்டம் இல்லை என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
மேலும், பாஜக அரசு தொழிலாளர் வர்க்கத்தின் உழைப்பால் உருவாக்கப்பட்ட எல்ஐசி உட்பட பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்தையும் விற்று ஒழிப்பதில் குறியாக உள்ளதாகவும் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் குற்றஞ்சாட்டினர்.
கல்வி, சுகாதாரம், உணவு மானியத்திற்கான ஒதுக்கீடு, ஆலைகள் மூடல், பொருளாதார பின்னடைவு ஆகியவற்றுக்கு நிதிநிலை அறிக்கையில் பதில் சொல்லத் தவறிவிட்டதாக, மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஏஐடியூசி, ஐஎன்டியூசி, சிஐடியு உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் அப்போது முழக்கங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தொழிற்சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: டெல்லி வன்முறைச் சம்பவத்தை நினைவுப்படுத்தும் மாணவர்கள் போராட்டம்