இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறுகையில், "புதுச்சேரியில் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் அனைத்துக் கடைகளும் திறக்கப்படும். அப்படித் திறக்கப்படும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை மட்டும் செயல்படும். அதில் பெட்ரோல் பங்க் உள்பட அனைத்துக் கடைகளும் அடங்கும். மருந்தகங்கள், பால், காய்கறிக் கடைகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்படும்.
அண்மையில் டெல்லிச் சென்று புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 3 பேர், காரைக்காலைச் சேர்ந்த 2 பேர், ஏனாம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்தப் பரிசோதனை முடிவுகள் விரைவில் அறிவிக்கப்படும். விவசாயம் சார்ந்த பொருள்களின் போக்குவரத்துக்கு தடை இல்லை. உரம், பூச்சிக்கொல்லிகள் விற்பனையகங்கள் வழக்கம்போல் திறந்திருக்கும்", எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'தனிமைப்படுத்தப்பட்டவர்கள் தண்டனை கைதி அல்ல' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி