ETV Bharat / bharat

என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள்: அரவிந்த் கெஜ்ரிவால் - தீவிரவாதி

டெல்லி : பாஜகவினர் என்னை தீவிரவாதி போல் சித்தரிக்கிறார்கள் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதியாக்கிய -பாஜக

author img

By

Published : Jan 29, 2020, 4:09 PM IST

டெல்லியில் வருகிற பிப்ரவரி மாதம் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலையொட்டி வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில் பாஜக,காங்கிரஸ்,ஆம் ஆத்மி கட்சிகள் தினமும் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றன.

அந்தவகையில், அரசானது டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் பாஜகவின் அனைத்து முக்கிய தலைவர்களும் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர். அந்த பரப்புரையில், டெல்லியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி புரிந்து வரும் ஆம் ஆத்மி கட்சி மக்களுக்கு எந்தவொரு நலத்திட்டத்தினையும் செய்யவில்லையென குற்றஞ்சாட்டினர்.

இதற்கு பதலளிக்கும் வகையில், மக்களிடையே பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டத்தினை செய்துவருவதாகவும், எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு கல்வி தரத்தினை உயர்த்தியுள்ளதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி, உங்கள் வீட்டில் உள்ள மூத்த மகன் போண்று யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் இருந்தால், அவர்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதியாக்கிய -பாஜக
அரவிந்த் கெஜ்ரிவாலை தீவிரவாதியாக்கிய -பாஜக

டெல்லியில் உள்ள இரண்டு கோடி மக்களின் நலனிற்காகவே முதலமைச்சராக பதவியேற்ற நாளிலிருந்து இரவு பகல் பாராமல் தினமும் உழைத்து வருகிறேன்.

உங்கள் வீட்டில் ஒருவனாக உள்ள என்னை தோற்கடிக்க 200 எம்.பிக்கள் 70 அமைச்சர்கள் மற்றும் பிற மாநிலங்களிலிருந்து முதலமைச்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் தினமும் என்னை தீவிரவாதியினை போன்று பரப்புரையில் சித்தரித்து பேசிவருவது தன்னை மிகுந்த மன வேதனையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க :சிஏஏ எதிர்ப்பு செயற்பாட்டாளர் ஷர்ஜீல் இமாம் டெல்லி போலீஸிடம் ஒப்படைப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.