டெல்லியில் சிவில் லைன்ஸின் ராஜ் நிவாஸ் மார்க் பகுதியில் அமைந்துள்ள, துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலின் அலுவலகத்தில் பணிபுரியும் 13 நபர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து டெல்லி துணைநிலை ஆளுநர் அனில் பைஜால் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஊழியர்களுக்கு கரோனா தொற்று உறுதியானது வேதனை அளிக்கிறது. அவர்களின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது. 24 மணி நேரமும் உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவர்கள் அனைவரும் கடினமான காலத்தில் அயராது உழைத்து வந்தவர்கள். வேலையின் மீதான அவர்களின் ஈடுபாட்டை நான் பாராட்டுகிறேன். விரைவாக மீண்டு வர பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டிருந்தார்.
தற்போது டெல்லி துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பணிபுரியும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டு வருகிறது. அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது.