மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியர் சென்றுள்ள ராம ஜென்ம பூமி தீர்த்த அறக்கட்டளை தலைவர் மகந்த் நிரித்யா கோபால் அங்கு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானத்துக்கு வருமாறு பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அழைப்புவிடுத்துள்ளோம். அதேபோல, இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்கள், ஆளுநர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும்.
கோயில் கட்டுமானத்துக்கு அரசிடமிருந்து நிதியுதவிகள் ஏற்றுக்கொள்ளப்படாது. மாறாக, மக்களிடம் நிதி திரட்டப்படும். ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளை அரசு எதிர்கொண்டுவரும் சூழலில், அவர்களுக்கு மேலும் ஒரு சுமையை கொடுக்க விரும்பவில்லை. ராமர் கோயில் கட்டும் பணி விரைவில் தொடங்கும்" என்றார்.
அயோத்தி வழக்கில் கடந்த நவம்பர் மாதம் தீர்ப்பு வழங்கி உச்ச நீதிமன்றம், சர்ச்சைக்குரிய 2.5 ஏக்கர் நிலத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்றும், மசூதி கட்டிக்கொள்ள சன்னி முஸ்லீம்களுக்கு வேறொரு இடத்தில் ஐந்து ஏக்கர் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
இதையும் படிங்க : 'இன்னும் மூன்றாண்டுகளில் ராமர் கோயில் தயார்' - ராம் மந்திர் அறக்கட்டளை