உத்தரப் பிரதேசம் மாநிலம் அலிகார் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீதி கேட்டு புகார் மனு ஒன்றை வழங்கினார்.
அந்தப் புகாரில், எனது மாமனார் எனக்கு வேலை வாங்கி தருவதாக அஸ்ஸாமில் ஒரு பகுதிக்கு அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார்.
இதுகுறித்து எனது கணவரிடமும், மாமியாரிடமும் தெரிவித்தேன். ஆனால், அவர்கள் இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என எச்சரித்தது மட்டுமின்றி விவகாரத்து செய்து விடுவேன் என மிரட்டினர். நான் தற்போது கர்ப்பமாக உள்ளேன். எனக்கு நீதி வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவத்தின் பாதிப்பை உணர்ந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் குமார், உடனடியாக வழக்குப்பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.