எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், புதிய வேளாண் திருத்த மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது விவசாயிகளுக்கு எதிராக உள்ளதாக கூறி பாஜக கூட்டணியில் 20 வருடங்களுக்கு மேலாக அங்கம் வகித்துவந்த சிரோமணி அகாலி தளம் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறியது.
இதனை சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் ட்விட்டர் பக்கத்தில், "விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் சட்டங்களை இயற்றியதை எதிர்த்து பாஜக கூட்டணியிலிருந்து சிரோமணி அகாலி தளம் வெளியேறியதை நாங்கள் வரவேற்கிறோம். எதிர்கட்சியினர், மக்களைத் தவிர்த்து ஆளுங்கட்சியின் தொழிலாளர்கள் அமைப்பு கூட இச்சட்டத்தை எதிர்க்கிறது. இதனால், மக்களின் கோபத்தை பாஜக சம்பாதித்துவருகிறது" என ட்வீட் செய்துள்ளார்.
விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பேரவை கொடுக்கும் உத்திரவாதத்தை அங்கீகரிக்க மறுக்கும் புதிய வேளாண் சட்டங்களை இயற்றியதை எதிர்த்து அகாலி தளம் பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற அக்கட்சியின் உயர்மட்டக் குழு ஒரு மனதாக முடிவெடுத்தது. அகாலி தளம் கட்சியின் தலைவர் சுக்பீர் சிங் தலைமையில், சனிக்கிழமை இரவு நடைபெற்ற கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: நம்பிக்கையில்லாத் தீர்மானம்: மாநிலங்களவைத் துணைத் தலைவர் விளக்கம்