மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏழு கட்டங்களாக நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சமீபத்தில் தேர்தல் பரப்புரை ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரசும் சமாஜ்வாதியும் இணைந்து மாயாவதியை ஏமாற்றி வருகின்றன என தெரிவித்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், 'எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியைச் சேர்ந்தவராக இருப்பார். அதுவும் வேட்பாளர் ஒரு பெண்ணாக இருந்தால் அது எனக்கு மிகுந்த சந்தோஷத்தைத் தரும்' என சூசகமாக மாயவதிக்கு தனது ஆதரவை தெரிவித்தார்.
அகிலேஷின் இந்தக் கருத்தின் மூலம் பகுஜன் சமாஜ் கட்சித் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.