ETV Bharat / bharat

மீண்டும் துணை முதலமைச்சராகும் அஜித் பவார் - 'மகா விகாஸ் அகாதி' கூட்டணியின் அடுத்த அதிரடி! - மகாராஷ்டிரா அரசியல் செய்திகள்

மகாராஷ்டிர முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இன்று பதவியேற்கவுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் சார்பில் அஜித் பவார் துணை முதலமைச்சராக பதவியேற்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Ajit Pawar to be Deputy CM?
மீண்டும் துணை முதலமைச்சராகும் அஜித் பவார்
author img

By

Published : Nov 28, 2019, 10:32 AM IST

Updated : Nov 28, 2019, 3:07 PM IST

தேவேந்திர ஃபட்னாவிஸும் அஜித் பவாரும் பதவியேற்ற அதே வேகத்தில், தங்களது பதவிகளை விட்டு விலகவும் செய்தனர். இதனால், நீண்ட நாள் அரசியல் குழப்பத்திற்கு விடிவு காலம் பிறந்தது. காங்கிரஸ்-என்சிபி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவின் மூலம் கிடைத்த அசுர பலத்தில் ஆட்சியமைக்க உரிமை கோரியது சிவசேனா. அதன்படி, இன்று மாலை 6:40 மணிக்கு மகாராஷ்டிராவின் 29ஆவது முதலமைச்சராக உத்தவ் தாக்கரே பதவியேற்கவுள்ளார்.

இந்நிலையில், பாஜகவுடன் கூட்டு சேர்ந்து துணை முதலமைச்சர் பதவியேற்றுக் கொண்டு, பின் விலகிய தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார், தற்போது மீண்டும் துணை முதலமைச்சராக பதவியேற்க உள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அவருக்கு இன்று பதவியேற்க விருப்பமில்லாததால், இன்னும் சில நாட்களில் பதவியேற்றுக் கொள்வார் என்றும் கூறப்படுகிறது.

'மகா விகாஸ் அகாதி' (சிவசேனா-காங்கிரஸ்-என்சிபி கூட்டணியின் பெயர்) கூட்டணியில், சிவசேனாவுக்கு முதலமைச்சர் பதவியும், என்சிபிக்கு துணை முதலமைச்சர் பதவியும், காங்கிரஸுக்கு சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மேலும், அமைச்சரவையில் யார் யாருக்கு எந்தெந்த துறை என்றும் முடிவு செய்யப்படவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: பவார் - தாக்கரே திடீர் நள்ளிரவு சந்திப்பு - நடந்தது என்ன? யாருக்கு எந்தெந்த துறைகள்?

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/breaking-news/ajit-pawar-to-be-deputy-cm/na20191128093635967

Nationalist Congress Party (NCP) Sources: Ajit Pawar to be the Deputy Chief Minister in #Maharashtra government but he is not likely to take oath today. 

Conclusion:
Last Updated : Nov 28, 2019, 3:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.