மகாராஷ்டிராவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததால், குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டிருந்த நிலையில், இன்று பாஜக, தேசியவாத காங்கிரஸுடன் இணைந்து ஆட்சியமைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழு தலைவரும், சரத் பவாரின் மருமகனுமாகிய அஜித் பவார் தான் ஆட்சியமைக்க பாஜகவுக்கு உதவியுள்ளார்.
இதற்கும் கட்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது அஜித் பவாரின் தனிப்பட்ட முடிவு என்று அக்கட்சியின் தலைவர் சரத் பவார் கூறியிருந்த நிலையில், அஜித் பவாரின் முடிவு கட்சி தொண்டர்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவர் பதவி, அஜித் பவாரிடமிருந்து தற்போது பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு அஜித் பவாரின் எதிர்வினை எவ்வாறு இருக்கும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ பட்னாவிஸின் பழைய ட்வீட்டை கலாய்க்கும் நெட்டிசன்கள்