அசாம் மாநிலம் துப்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள ரூபஸி விமான நிலையம் வரும் செப்டம்பர் மாதம் முதல் பயணிகளுக்காக திறந்து விடப்படப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான நிலைய ஆணையம் (Airport Authority of India) ஏற்கனவே செப்டம்பர் 17ஆம் தேதி கட்டுமான நிறுவனத்திற்கு இதற்கான காலக்கெடுவை ஏற்கனவே வழங்கிவிட்டது.
இதனைத் தொடர்ந்து அசாம் மாநில முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் வழிகாட்டுதலுடன் அதற்கான முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும், ரூபஸி விமான நிலையம் இரண்டாம் உலகப் போரின்போது கட்டப்பட்டது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக சேவையில்லாமல் இருந்தது. இந்நிலையில், ரூபஸி விமான நிலையத்தை புனரமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தற்போது புனரமைக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், இந்திய விமான நிலைய ஆணையம் கட்டுமான பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இதுகுறித்த முழு அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.