வடமாநிலங்களில் காற்றின் மாசு அபாய நிலையைத் தாண்டியதைத் தொடர்ந்து, அதனை கட்டுப்படுத்த அரசு பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. இதனைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகச் செயலாளர், டெல்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் ஆகியோருக்கு இடையே உயர் அலுவல் கூட்டம் நடந்தது. எடுக்கப்பட்ட நடிவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் செயலாளர் சி.கே. மிஸ்ரா, "காற்றின் தரத்தை சுற்றுச்சூழல் அமைச்சகமும் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியமும் டிசம்பர் 21ஆம் தேதி வரை கண்காணிக்கும். மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக அரசு விதித்த விதிகளை மீறுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த சில நாட்களாக மாசு குறைந்து காணப்படுகிறது. சுற்றுச்சூழல் கேடாமல் இருக்க அடுத்த 2 - 3 ஆண்டுகள் வரை தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். மாசுவை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பங்களின் உதவியை நாட அரசு தயங்காது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ராகுல் குடும்பத்துக்கு எஸ்.பி.ஜி நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு - குரல் எழுப்பிய காங்கிரஸ் எம்.பி., வெளிநடப்பு செய்த திமுக எம்.பி.,க்கள்!