மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் இன்று (அக்டோபர் 2) நாடு முழுவதும் சிறப்பாகக் கொண்டாப்பட்டு வருகிறது. அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் காந்திக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதன் ஒரு கட்டமாக டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஏர் இந்தியாவின் ஏ320 விமானத்தில் காந்திக்கு பெருமை சேர்க்கும் விதமாக அவரது முழு உருவம் ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
விமானத்தின் பின்புறம் இந்த ஓவியமானது வரையப்பட்டுள்ளது. இதில் காந்தி கையில் கைப்பிடியுடன் இருக்கும் வகையில் ஓவியம் அமைந்துள்ளது. இதனை விமான நிலையத்தில் உள்ள பயணிகள் பலரும் பார்வையிட்டு ரசித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: காந்தி 150: 'வைஷ்ணவ் ஜன தோ' சிறப்புப் பாடலை வெளியிட்டார் ராமோஜி ராவ்!