லண்டனில் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்கள் 326 பேர் "வந்தே பாரத் திட்டம்" இன் கீழ் விமானம் மூலம் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு இன்று அதிகாலை 12.30 மணிக்கு அழைத்து வரப்பட்டனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை மாலை, ரியாத்தில் இருந்து சுமார் 139 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டனர். "வந்தே பாரத் திட்டம்' இன் நான்காவது நாளில், ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் இங்கிலாந்து, பங்களாதேஷ், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா, சிங்கப்பூர், வளைகுடா நாடுகளில் இருந்து வெளிநாடு வாழ் இந்தியர்களை நாட்டின் பல நகரங்களுக்கு அழைத்து வந்தனர்.
இந்தியாவில் ஊரடங்கு விதிகளை தளர்த்தி வருவதை அடுத்து வெளிநாடு வாழ் இந்தியர்களை அழைத்துவரும் 'வந்தே பாரத் திட்டம்' இன் கீழ் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருகிறது.
இதற்காக ஏர் இந்தியா மே 7 முதல் மே 13 வரை முதல் வாரத்தில் 64 விமானங்களை இயக்கும், 12 நாடுகளைச் சேர்ந்த 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அழைத்துவரப்படுவார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க:வந்தே பாரத்: தாயகம் அழைத்துவரப்பட்ட கேரள மக்கள்!