ETV Bharat / bharat

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்து; 16 பேர் பலி

Air India
Air India
author img

By

Published : Aug 7, 2020, 8:44 PM IST

Updated : Aug 7, 2020, 10:46 PM IST

20:39 August 07

விபத்து தொடர்பான முதற்கட்ட காட்சிகள்

கேரள மாநிலத்தில் கடும் மழை பெய்து வரும் நிலையில், துபாயிலிருந்து கோழிக்கோடு கரிப்பூர் விமானநிலையத்திற்கு வந்த ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. தரையிறங்கும்போது ஓடுதளப்பாதை வழுக்கியதன் காரணமாக, அங்கிருந்து விலகியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளது.  

விபத்தில் விமானம் இரு துண்டாக உடைந்து, அதன் பாகங்கள் ஓடுதளப் பகுதியில் சிதறியுள்ளன. விமானத்தில் இரு விமானிகள், ஐந்து ஊழியர்கள், 10 குழந்தைகள், 174 பயணிகள் உள்பட மொத்தம் 191 பேர் பயணம் செய்துள்ளனர். இவ்விபத்தில் விமானி உள்பட 16 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 123 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 15 பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி, கேரள முதலமைச்சர் பினராயி விஜயனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விமான விபத்து குறித்து கேட்டறிந்தார். அப்போது சம்பவ இடத்துக்கு கோழிக்கோடு, மலப்புரம் மாவட்ட ஆட்சியர்கள், ஐஜி அசோக் யாதவ் ஆகியோர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக, பிரதமரிடம் கேரள முதலமைச்சர் தெரிவித்தார். 

விபத்து தொடர்பாக, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களின் அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், விபத்து குறித்து விசாரிக்க விமானப் போக்குவரத்து துறை இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

Last Updated : Aug 7, 2020, 10:46 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.