மதுரா (உத்தரப் பிரதேசம்): இரண்டு வாரங்களில் குழந்தை பிறக்கவிருந்த நிலையில், கோழிக்கோடு விமான விபத்தில் இணை விமானி அகிலேஷ் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவைச் சேர்ந்தவர் அகிலேஷ் குமார் (32). இவரது மனைவி மேகா. இவர்களுக்கு, கடந்த 2017ஆம் ஆண்டு திருமணமானது. மேகா தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கிறார். அகிலேஷ் குமாருக்கு இரு இளைய சகோதரர்கள், ஒரு சகோதரி, பெற்றோர் உள்ளனர்.
கோழிக்கோடு விமான விபத்து : விமானத்தின் கருப்புப் பெட்டி மீட்பு
பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன்னர் தனது குடும்பத்தினரைப் பார்த்த அகிலேஷ் பின்னர், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் உள்ள இந்தியர்களை மீட்க சென்று விட்டார். ஏர் இந்தியாவில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் இணை விமானியாக அகிலேஷ் குமார் பணியாற்றிவந்தார். வந்தே பாரத் திட்டத்தின் சார்பில் முதல் கட்டமாக கோழிக்கோடு- துபாய்- கோழிக்கோடு செல்ல மே மாதம் நடந்த மீட்பு பணிகளில் முதல் விமானியாக சென்றவர் அகிலேஷ் குமார்தான்.
இருமுறை கைவிடப்பட்ட தரையிறங்கும் முயற்சி... 3ஆவது முறை நிகழ்ந்த பெரும் விபத்து!
இதனிடையே உயிரிழந்த அகிலேஷ் குறித்து உறவினர்கள் கூறுகையில், அகிலேஷுக்கு இன்னும் 15 நாட்களில் குழந்தை பிறக்கவிருக்கிறது. அந்த குழந்தையின் முகத்தைக் கூட பார்க்காமல் போய்விட்டாரே என கண்ணீர் மல்க தெரிவித்தார்கள். மேலும் இவர் நல்ல நடத்தை உள்ளவர், கண்ணியமானவர், பணிவானவர் என உடன் பணியாற்றியோர் கூறியிருக்கின்றனர்.