இந்திய விமானப்படையின் தளபதியாக பதவி வகித்துவந்த எஸ்.பி.தனோவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து புதிய தளபதியாக ஏர் மார்ஷல் ராகேஷ் சிங் பதவ்ரியா புதிய தளபதியாக அறிவிக்கப்பட்டு, இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தளபதியாக பொறுப்பேற்றுக் கொண்ட ராகேஷ் சிங் பதவ்ரியா 1980 முதல் இந்திய விமானப்படையில் சேவை செய்து வருகிறார். இவர் பல்வேறு சூழல்களில் சிறப்பாக செயல்பட்டதற்காகப் பல பதக்கங்களை பெற்றுள்ளார். இதுவரை 4 ஆயிரத்து 250 மணி நேரம் விமானத்தில் பறந்துள்ளார். ரஃபேல் ஜெட் விமானத்தில் பறந்த ஒரு சில விமானிகளில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: டிஆர்டிஓவின் அடுத்த மைல்கல் - எடை குறைந்த ஏவுகணை சோதனையில் வெற்றி!