ETV Bharat / bharat

அயோத்தி வழக்கில் திடீர் திருப்பம் - இஸ்லாமிய அமைப்புகள் அதிரடி முடிவு!

லக்னோ: அயோத்தி சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான தீர்ப்பிற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்ய இஸ்லாமிய அமைப்புகள் முடிவு செய்துள்ளது.

supreme court
author img

By

Published : Nov 17, 2019, 9:24 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் ராம்லாலாவுக்கே சொந்தம், அந்த இடத்தில் ராமர் கோயில் கட்டிக்கொள்ளலாம் என்று உச்சநீதிமன்றம் நவ. 9ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.

இஸ்லாமியர்கள் மசூதி கட்ட 5 ஏக்கர் மாற்று இடம் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து சன்னி வக்பு வாரியம், தீர்ப்பை மதிக்கின்றோம், ஆனால் திருப்தியில்லை என்று தெரிவித்தது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக லக்னோவில், அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியத்தின் (AIMPLB) தலைவர் மவுலானா வாலி ரஹ்மானி தலைமையில் இஸ்லாமிய அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஜமாய்த் உலாமா -ஐ- ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதானி

இதில், அயோத்தி வழக்கின் தீர்ப்பை ஏற்பதா? மறுப்பதா அல்லது மறுசீராய்வு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜமாய்த் உலாமா -ஐ- ஹிந்த் அமைப்பின் தலைவர் அர்ஷத் மதானி, "கோயிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்படவில்லை என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருந்தும் மசூதி எங்களுக்கு வழங்கப்படவில்லை.

இதனால், நாங்கள் மறுசீறாய்வு மனு தாக்கல் செய்யவுள்ளோம். எங்களுக்கு என்ன உரிமை இருந்தது என்பது குறித்து கோரிக்கை வைக்கப்படும். எங்களுடைய மனு நூறு விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், நாங்கள் மறுசீராய்வு மனு தாக்கல் செய்வோம். அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் சார்பில் இந்த வழக்கு தொடரப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.