ETV Bharat / bharat

எய்ம்ஸ் குளறுபடி: இஸ்லாமியப் பெண்ணின் உடல் மாற்றி ஒப்படைப்பு; தகனம் செய்த இந்து குடும்பத்தினர் - கரோனா நோயாளிகளின் உடல் தவறான குடும்பங்களடம் ஒப்படைப்பு

டெல்லி: எய்ம்ஸ் மருத்துவமனையில் கரோனாவால் உயிரிழந்த இரண்டு பெண்களில் உடல்கள் தவறான குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

AIIMS
AIIMS
author img

By

Published : Jul 8, 2020, 4:16 PM IST

உத்தரப் பிரதேச மாநிலம், பெய்ரேலி நகரைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 4ஆம் தேதி (சனிக்கிழமை) அனுமதிக்கப்பட்டார். இந்தப் பெண்ணை பரிசோதித்ததில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இந்நிலையில், கடந்த 6ஆம் தேதி (திங்கள்கிழமை) இரவு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து, உயிரிழந்த பெண்ணை கல்லறையில் வந்து வாங்கிக்கொள்ளுமாறு அவரது குடும்பத்தினரை மருத்துவமனை நிர்வாகம் வரவைத்துள்ளது. அங்குவந்த குடும்பத்தினர் அங்கிருந்த உடல் அந்த பெண்ணுடையது இல்லை என்று கூறியுள்ளனர்.

பின்னர், எய்ம்ஸ் மருத்துவமனையிடம் விசாரித்தபோது, உயிரிழந்த அந்த இஸ்லாமியப் பெண் தவறான குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டதாகவும், அவரின் உடலைப் பெற்றவர்கள் இந்துக்கள் என்பதால், உடலை ஏற்கனவே அவர்கள் தகனம் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் சகோதரர், "ஜூலை 7ஆம் தேதி காலை இரண்டு மணிக்கு மருத்துவமனையிலிருந்து எங்களுக்கு அழைப்புவந்தது. அப்போது, என் சகோதரி நேற்று (ஜூலை 6) இரவு 11.10 மணிக்கு உயிரிழந்ததாகத் தெரிவித்தனர். கல்லறைக்குச் சென்று உடலைப் பெற்றுக்கொள்ளுமாறு கூறினர். அவரது முகத்தையாவது காட்டுங்கள் என்று கேட்டேன். ஆனால், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்துவிட்டனர்" என்றார். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் குடும்பத்தினர் காவல் துறையிடம் புகார் அளித்துள்ளனர்.

இதனிடையே இச்சம்பவம் குறித்துப் பேசிய எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர் சஞ்சீவ் லால்வானி, "உடல்கள் தவறான குடும்பங்களிடம் ஒப்படைக்கப்பட்டது உண்மைதான். இந்தத் தவறு ஏன், எப்படி நடந்து என்பது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். தவறு செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனை அமைப்பை மேம்படுத்த முயன்றுவருகிறோம். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் நான் துணைநிற்கிறேன்" என்றார்.

இந்தியாவின் முன்னணி மருத்துவமனைகளில் ஒன்றான எய்ம்ஸில் இதுபோன்ற குளறுபடி நடந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : கரோனா அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட முதியவர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.