ETV Bharat / bharat

எய்ம்ஸில் நோயாளிகள் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிப்பு!

டெல்லி: கரோனா அச்சம் முடிந்து எய்ம்ஸ் மருத்துவமனை பழைய நிலைக்கு திரும்பும் வரை, பொது வார்டுகளில் உள்ள நோயாளிகள் கட்டணம் செலுத்த தேவை இல்லை என மருத்துவமனை நிர்வாகம் விலக்கு அளித்துள்ளது.

author img

By

Published : May 13, 2020, 11:21 PM IST

எய்ம்ஸ்
எய்ம்ஸ்

கரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொது வார்டுகளில் சிகிச்சைப் பெறும் மக்கள் கரோனா அச்சுறுத்தல் முடியும் வரை, பணம் செலுத்துவதற்காக கால அவகாசம் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், "அவசரகாலத்தை கருத்தில் கொண்டு பொது வார்டுகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த விலக்கானது மருத்துவமனை நிர்வாகம் பழைய நிலைமைக்குத் திரும்பும் வரை அமலில் இருக்கும்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதன்படி, ஆயுஷ்மான் பாரத்-பிரதான் மந்திரி ஜான் ஆரோக்கிய யோஜனா (AB-PMJAY) திட்டத்தின்படி எய்ம்ஸ் மருத்துவமனைக்கும், மற்ற அனைத்து மையங்களும் தொடர்ந்து தேவையான மருத்துவ உபகரணங்களையும், நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகளையும் வழங்கி வருகின்றனர். சிகிச்சை முடிந்து வெளியே சென்ற பிறகும் நோயாளிகளுக்கு 14 நாட்களுக்கு மருந்துகள் வழங்கப்படுகிறது.

மேலும், எய்ம்ஸ் மருத்துவமனையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த OPD சேவைகளும், அவசரகால அறுவை சிகிச்சை சேவையும் விரைவில் தொடங்க திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: திருமணத்தில் புதுமை... மாஸ்க்கில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.