ETV Bharat / bharat

இந்தியாவுக்கு 5,714 கோடி நிதி ஒதுக்கிய ஆசிய வங்கி

author img

By

Published : Jun 17, 2020, 6:18 PM IST

டெல்லி : கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக 5,714 கோடி ரூபாய் சிறப்பு நிதியை இந்தியாவுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி ஒதுக்கியுள்ளது.

AIIB
AIIB

உலகம் முழுவதும் கரோனா பெருந்தொற்றை எதிர்கொள்ள பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னேறிய நாடுகளே கரோனாவை எதிர்கொள்ள முடியாமல் பெரும் நெருக்கடிக்குள்ளாகி உள்ளன.

இந்நிலையில், கரோனா பாதிப்பை எதிர்கொள்ள இந்தியாவுக்காக ஆசிய வளர்ச்சி வங்கி 5,714 கோடி ரூபாய் சிறப்பு நிதியை ஒதுக்கியுள்ளது. இது தொடர்பாக அவ்வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஆசிய வளர்ச்சி வங்கி இந்தியாவின் சுகாதார நிலையை ஆராய்ந்து அதன் தேவையைக் கண்டறிந்துள்ளது.

அதன்படி, 27 கோடிக்கும் மேற்பட்டோர் இந்தியாவில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள், மேலும் எட்டு கோடிக்கும் மேற்பட்டோர் அடர்த்தியான பகுதியில் வசித்து வருகிறார்கள். எனவே இவற்றைக் கருத்தில் கொண்டு, இந்த பெருந்தொற்றை இந்தியா எதிர்கொள்ளும் வகையில், அவசரகால சிறப்பு நிதியாக 5,714 கோடி ரூபாய் இந்தியாவுக்கு ஒதுக்கப்படுகிறது” எனக் கூறியுள்ளது.

ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவர் பதவியில் இந்தியாவைச் சேர்ந்த டி.ஜே.பாண்டியன் என்பவர் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: சீனப் பொருள்களை புறக்கணிப்போம் - வர்த்தக் கூட்டமைப்பு போர்க்கொடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.