ETV Bharat / bharat

இட ஒதுக்கீடு விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு - இட ஒதுக்கீடு

டெல்லி: மருத்துவப் படிப்பில் பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக் கோரி அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கைத் தொடர்ந்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
author img

By

Published : Jun 9, 2020, 5:04 PM IST

Updated : Jun 9, 2020, 8:56 PM IST

இளங்கலை, முதுகலை மருத்துவப் படிப்புகளில், பிற்படுத்தப்பட்ட சமூகத்திற்கு அரசு கல்லூரிகளில் 27 விழுக்காடு தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிடக்கோரி, அதிமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சட்டத்துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் தாக்கல் செய்த மனுவில், "மத்திய அரசு பணிகளில், 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு இந்திய அரசு வழங்கியது.

பின்னர், உச்ச நீதிமன்றம் அதனை உறுதிசெய்தது. ஆனால், கடந்த 2017-18, 2018-19, 2019-20 ஆகிய கல்வியாண்டுகளில் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. கடந்த 2018-19 கல்வியாண்டில், மொத்தமுள்ள 7,982 இடங்களில் 2,152 பேருக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 220 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர்.

அதேபோல், இளங்கலை மருத்துவப் படிப்பில் தேசிய அளவிலான இட ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 66 பேர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர்ந்தனர். இளங்களை மருத்துவப் படிப்பைப் பொறுத்தவரை, தேசிய அளவில் 4,061 இடங்கள் உள்ளன. 27 விழுக்காடு என்றால் 1,096 பேருக்கு இடங்கள் ஒதுக்கியிருக்க வேண்டும். இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறதா என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான இடங்களில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக, திமுக செய்தித் தொடர்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி. கே. எஸ். இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்குத் தொடர்ந்துள்ளனர். அதேபோல், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வாடிக்கையாளர்கள் இல்லாமல் வெறிச்சோடிய ஆக்ரா சந்தை!

Last Updated : Jun 9, 2020, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.