ETV Bharat / bharat

வாக்காளர் பட்டியலில் ரோஹிங்கியாக்கள் பெயரா? - பாஜகவுக்கு சவால் விடுத்த ஓவைசி - வாக்காளர் பட்டியலில் ரோஹிங்கியாக்கள் பெயரா?

ஹைதராபாத்: நடக்கவிருக்கும் மாநகராட்சி தேர்தலில் உள்ள வாக்காளர் பட்டியலில் ஆயிரம் ரோஹிங்கியாக்களின் பெயர்களை பாஜக வெளியிட வேண்டும் என அசாதுதீன் ஓவைசி சவால் விடுத்தார்.

aimim
aimim
author img

By

Published : Nov 24, 2020, 6:44 PM IST

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தல் டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்று 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இதில் ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதிக்கும் (டிஆர்எஸ்), பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஹைதராபாத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிகமாக இருப்பதால், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் போட்டியிடுகிறது.

இந்நிலையில், நேற்று (நவ.23) மாலை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அசாதுதீன் ஓவைசி, "ஹைதராபாத் வாக்காளர் பட்டியலில் 30ஆயிரம் முதல் 40ஆயிரம் பேர் வரை ரோஹிங்கியாக்கள் இருப்பதாக உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். வாக்காளர் பட்டியலில் 30,000 ரோஹிங்கியாக்கள் இருந்தால், உள்துறை அமைச்சர் அமித் ஷா என்ன செய்கிறார்? அவர் தூங்குகிறாரா?

வாக்காளர் பட்டியலில் ரோஹிங்கியாக்கள் எவ்வாறு பட்டியலிடப்பட்டுள்ளனர் என்பதைப் பார்ப்பது தானே அவருடைய வேலை. பாஜக நேர்மையான கட்சி என்றால், இன்று மாலைக்குள் அதில் ஆயிரம் பெயர்களை தெரிவிக்க வேண்டும். பாஜகவின் நோக்கம் வெறுப்பு அரசியலை பரப்புவதுதான். இந்த தேர்தல் போட்டி ஹைதராபாத் மற்றும் பாக்யநகருக்கு மட்டுமே நடக்கிறது. இதில் யார் வெல்வார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டியது உங்கள் பொறுப்பு" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட திருநங்கை மருத்துவர் - கிளினிக் அமைத்து கொடுத்த காவல் ஆய்வாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.