அசாம் மாநிலத்தின் இந்தியா-பூடான் எல்லைப் பகுதியில் அமைந்திருக்கும் கோக்ராஜர் மாவட்டத்தில் ஆயுதக் கடத்தல் போன்ற சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபடுவதாக காவல்துறைக்கு தொடர்ந்து தகவல் கிடைத்து வந்துள்ளது.
இந்நிலையில், அங்கு சில இடங்களில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக புலனாய்வாளர்கள் மூலம் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று மாலை 6:30 மணியளவில் திடீர் சோதனையில் அசாம் காவல்துறையினர் ஈடுபட்டனர். அந்த சோதனையின்போது லியோபனி நளா, அல்டாபானி நளா ஆகிய ஏராளமான துப்பாக்கிகள், மேகசின்கள், வெடிகுண்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கூட்டு ஆயுதப் பாதுகாப்பு படையால் பின்வரும் ஆயுதங்கள் மீட்கப்படுகின்றன :-
ஏ.கே.56 - 2
எம் 79 கையெறி ஏவுகணை - 1
.22 துப்பாக்கி - 1
நாட்டு துப்பாக்கி - 11
.22 எம்.எம் நாட்டு கைத்துப்பாக்கி - 1
7.65 எம்.எம் நாட்டு கைத்துப்பாக்கி - 2
9 எம்.எம் நாட்டு கைத்துப்பாக்கி - 1
கைத்துப்பாக்கிகள் - 3
ஏ.கே.56 - 11
எம்16 - 2
.22 துப்பாக்கி - 1
.22 கைத்துப்பாக்கியின் இரண்டு இதழ் - 2
9 எம்.எம் கைத்துப்பாக்கி - 10
7.65 எம்.எம் நேரடி படைத்தள குண்டுகள் - 6
7.62 எம்.எம் நேரடி படைத்தள குண்டுகள் - 19
ஏ.கே. 56 - 21
5.56 எம்.எம் நேரடி படைத்தளவாட குண்டுகள் - 88
9 எம்.எம் நேரடி படைத்தளவாட குண்டுகள் - 41
7.65 எம்.எம் படைத்தளவாட குண்டுகள் - 34 வெடிமருந்துகள்
.22 எம்.எம் படைத்தளவாட குண்டுகள் - 2
ஏழு துப்பாக்கித் தோட்டாக்கள்
நாட்டு வெடிமருந்துகள் கைத்துப்பாக்கி - 11
நாட்டு கையெறி குண்டுகள் - 2
.36 கையெறி குண்டுகள் - 10
சீன கையெறி குண்டுகள் - 6
நாட்டு கையெறி குண்டுகள் - 2
உருகி கையெறி குண்டுகள் - 8,
மின்சார டெட்டனேட்டர்கள் - 34
எண் 27 டெட்டனேட்டர்கள் - 2 மற்றும்
எம் -79 கனரக ஆயுதத்திற்கான குண்டுகள் - 2
செயற்கைக் கோள் கைப்பேசி - 1

இவற்றை காவல் துறையினர் கைப்பற்றியுள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்களை காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
போடோலாந்து பிராந்திய மண்டலத்தில் போடோலாந்து பிராந்திய கவுன்சில் தேர்தல் நடைபெறவுள்ள இந்த சூழலில், இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : விரைவில் வருகிறது கடற்படையில் பெண்களுக்கான ஆணையம்!