ETV Bharat / bharat

'விவசாயிகளுக்கு மட்டுமல்ல, நுகர்வோருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வேளாண் சட்டம்' - வேளாண் அறிஞர் பாமயன் எச்சரிக்கை!

author img

By

Published : Oct 5, 2020, 6:32 AM IST

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகளை மட்டுமன்றி, சிறு வியாபாரிகள் மற்றும் நுகர்வோரான பொதுமக்களையும் கடுமையாகப் பாதிக்கும் எனவே, இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என வேளாண் அறிஞர் பாமயன் தெரிவித்துள்ளார்.

farmers
farmers

வேளாண் துறையில் புதிய திருத்தங்களைக் மேற்கொண்டு மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய மூன்று மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மாநிலங்களவை, மக்களவையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டன.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியப்பட்டதையடுத்து குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று அதனை புதிய சட்டமாகவும் மத்திய அரசு இயற்றியுள்ளது.

வேளாண் திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த புதிய வேளாண் சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை என்றும், மாறாக, விவசாயிகளின் வாழ்வை நசுக்கும் வகையில் தான் இச்சட்டத்திருத்தம் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.

விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா வேளாண் சட்டம்
விவசாயிகளுக்கு பலன் அளிக்குமா வேளாண் சட்டம்?

தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆளும் அதிமுக அரசு வேளாண் திருத்தச் சட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறது. திமுக, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த புதிய வேளாண் சட்டத்தால் விவசாயிகளுக்கு சாதகமா? அல்லது பாதகமா? என்பது குறித்து இயற்கை வேளாண் அறிஞர் பாமயனிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு சிறப்பு நேர்காணல் கண்டது.

புதிய வேளாண் சட்டம் குறித்து அவர் கூறுகையில், "மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய திருத்தங்களின் மூலமாக தனியாரின் வரைமுறையற்ற சந்தை சுரண்டலுக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விவசாய உற்பத்திப் பொருள்களைப் பதுக்குவது சட்டப்பூர்வமாக மாற்றப்பட்டுள்ளது. பொருள்களை பண்டக சாலைகளில் வைத்துக்கொள்வதில் முன்னர் இருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன.

வேளாண் திருத்தச் சட்டம் விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் - வேளாண் அறிஞர் பாமயன்

இதன் காரணமாக அரசு கொள்முதல் நிலையங்கள் தங்களது இயல்பை இழந்துவிடும். பிகார் மாநிலம் இதற்கு நல்ல உதாரணம். 2006ஆம் ஆண்டிலிருந்து அரசின் கொள்முதல் நிலையங்கள் அங்கு மூடப்பட்டு, தனியாருக்கு மாற்றப்பட்டன. இதன் விளைவாக, விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட மக்காச்சோளத்தின் விலை ரூ.24லிருந்து ரூ.13ஆக சரிந்தது. இதனால், அரசால் நிர்ணயிக்கப்படும் குறைந்தபட்ச ஆதார விலையும் கூட இனி விவசாயிகளுக்கு கிடைக்காமல் போகும்.

குறைந்தபட்ச ஆதார விலை என்பதே மிகத் தவறான கொள்கை. அதிகபட்ச ஆதார விலைதான் சரியான ஒன்று. நாட்டின் எல்லையைக் காக்கின்ற ராணுவ வீரர்களைப் போன்றே நாட்டு மக்களின் உணவுத் தேவையை உத்தரவாதப்படுத்துகின்றனர் விவசாயிகள். தற்போதைய திருத்தச் சட்டத்தின் மூலமாக குறைந்தபட்ச ஆதார விலைக்கும் உலை வைக்கப்பட்டுள்ளது. குதிரை குப்புறத் தள்ளிவிட்டதும் மட்டுமன்றி, நம் மேலே ஏறி சவாரி செய்வதற்கு ஒப்பானதே அரசின் இந்த செயல்.

வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகள்

பருப்பு, பயிறு வகைகள், எண்ணெய் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை அத்தியாவசியப் பொருள்களின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு நாளும் குடும்பங்களில் பயன்படுத்தக் கூடிய பொருள்கள், ஆகையால் இது நுகர்வோராகிய பொதுமக்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. இந்தியாவில் 55 விழுக்காடாக இருக்கக்கூடிய விவசாயிகளும் நுகர்வோராக இருக்கின்ற காரணத்தால் இந்த பாதிப்பு அவர்களுக்கு இருமடங்காகிறது.

ஹரியானா, பஞ்சாப் போன்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சிறு சிறு மண்டிகள் நடத்துகிறார்கள். விவசாயிகளுக்கும் மண்டி உரிமையாளர்களுக்குமிடையே நல்லுறவு நிலவுகிறது. இந்த புதிய சட்டத்திருத்தம் அவர்களைக் கடுமையாகப் பாதிக்கிறது. ஆகையால் அங்கே இரு தரப்பினரும் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மத்தியில் ஆளுகின்ற பாஜக அரசுக்கு தென் மாநிலங்களில் செல்வாக்கு இல்லை. வடமாநில மக்கள் மத்தியில் தாங்கள் பெற்றுள்ள செல்வாக்கின் அடிப்படையில்தான் தொடர்ந்து ஆட்சியில் நீடிக்க முடிகிறது. இந்நிலையில், வேளாண் சட்ட விவகாரத்தில் வடமாநில விவசாயிகளின் அதிருப்தி, பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஆகையால் இதனை உணர்ந்து மத்திய அரசு புதிய வேளாண் திருத்தச் சட்டத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்" என்றார்.

'இந்தியாவின் முதுகெலும்பு விவசாயம்' என்று சொல்லிக் கொள்கிறோம். ஆனால் தொடர்ந்து விவசாயிகளின் முதுகெலும்பை முறிக்கின்ற சட்டங்களும், மசோதாக்களும் இந்தியாவின் அடையாளத்தை இழப்பதற்கு காரணமாகிவிடுமோ என்ற அச்சம் எழாமலில்லை. இப்புதிய சட்டம் இந்திய விவசாயிகளுக்கு பெரும் அச்ச உணர்வைத் தோற்றுவித்துள்ளது என்பதை அழுத்தமாக உணர முடிகிறது. இவ்விவகாரத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்க வேண்டும் என்பதே பாமயன் உள்ளிட்ட வேளாண் அறிஞர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க:இந்தியாவில் இயற்கை விவசாயத்துக்கு வித்திடுபவர் யார்...?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.