ETV Bharat / bharat

கோவிட்-19 காலத்தில் விவசாயம் - கோவிட்-19 காலத்தில் விவசாயம்

“உணவு மற்றும் விதைகள் மூலமாக வைரஸ் பரவுகிறது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. சமீபத்தில் வைரஸால் மாசுபடுத்தப்பட்ட மேற்பரப்புகள் வழியாக பரவுதல் ஸ்மியர் நோய்த்தொற்றுகள் மூலம் சாத்தியமாகும். இருப்பினும், சுற்றுச்சூழலில் கரோனா வைரஸ்களின் ஒப்பீட்டளவில் குறைந்த நிலைத்தன்மை காரணமாக, மாசுபட்ட பின்னர் ஒரு குறுகிய காலத்தில் மட்டுமே இது நிகழ வாய்ப்புள்ளது”

விவசாயம்
விவசாயம்
author img

By

Published : Mar 21, 2020, 3:27 PM IST

வைரஸ் என்ற பெயரை விட, கோவிட்-19 என்ற பெயர் உலகின் அனைத்து மொழிகளிலும் புகழ் பெற்றுள்ளது. பொருளாதாரங்கள் வீழ்ச்சியடையும் அதே நேரம், பீதி நம் வீதிகள் மற்றும் ஊடகங்கள் வழியாக நம்மை ஆட்சி செய்கிறது. கரோனா வைரஸால் தற்போது தும்மல் மற்றும் இருமல் ஆகியவை ஒரு குற்ற செயலாகிவிட்டது.

மற்ற நாடுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பைப் போல இந்திய அரசாங்கமும் இந்த உலகளாவிய தொற்றுநோயைக் கட்டுப்படுத்த மிகவும் முயற்சி செய்கிறது. ஆனால் அச்சுறுத்தல் நம்மைச் சூழ்ந்துள்ளது. உலகின் சக்தி வாய்ந்த சீனா போன்ற நாடே இந்த நோய்க்கு இரையாகிவிட்டது, ஈரான் இதனால் அழிக்கப்பட்டு வருகிறது, மேலும் கோவிட் -19 சார்க் நாடுகளையும் இந்தியாவையும் இன்னும் சில நாட்களில் அதன் முழு வலிமையுடன் தாக்கும் என எதிர்பார்க்கலாம் .

அதற்கு முன்பாகவே, கறுப்புச் சந்தைகள் ஏற்கனவே முகமூடிகள், சோப்புகள், கிருமி நாசினி போன்ற பல புதிய பொருட்களை விற்பனை செய்கின்றன. இந்த வைரஸால் நமக்கு ஏற்பட்ட வெளிப்படையான பாதிப்பில் உலகம் இருக்கும்போது மக்கள் பொருட்களை பதுக்கி வைக்கிறார்கள். கோவிட்-19 பயம் இந்தியாவையும் உலகையும் பற்றியுள்ளது. அந்த பயம், இன்று கரோனா வைரஸை விட உலகிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தருகிறது. மிக விரைவில் கறுப்புச் சந்தைகள் அத்தியாவசிய மருந்துகள், உணவுகள் போன்றவற்றை பதுக்கி வைக்கும்.

மேலும் நம்பிக்கையற்ற நிலை மற்றும் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் போது, விவசாயத் துறை மற்றும் விதைகள் கரோனா பிரச்சினையால் பாதிக்கப்படும். நமது வாழ்வின் முதுகெலும்பாக உள்ள வேளாண்மையின் பெரும்பகுதி தரமான விதைகளையும் உலகளவில் ஒழுங்கமைக்கப்பட்ட விதைத் துறையையும் சார்ந்துள்ளது. நமது உணவு உற்பத்தி என்பது மனித வளங்கள், பண்ணை உழைப்பு மற்றும் விவசாய பொருட்களான விதைகள், உரங்கள் போன்றவை சுலபமாக கிடைக்கும் வகையில் அமையப் பெற்றது. இவை இரண்டும் இந்த நேரத்தில் தடைசெய்யப்பட்டுள்ளன.

ஐரோப்பிய ஒன்றியத்தைத் தொடர்ந்து அமெரிக்கா தனது எல்லையை மூடியுள்ளது, இப்போது உலக நாடுகள் விசாக்களை ரத்து செய்து மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துகிறது. தமது நாடுகளுக்குள் கூட, மக்கள் வெளியே வர பயப்படுகிறார்கள், குறிப்பாக நெரிசலான இடங்களைத் தவிர்க்கிறார்கள்.

வியட்நாம் முதல் இத்தாலி வரை பள்ளிகள் மூடப்பட்டு வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. தற்போதைய சூழல் விவசாயத்தின் மூலம் கிடைப்பவற்றை குறைக்கிறது. இந்த பருவத்தில் விவசாய கூலி உயர்வு இருக்கும், மேலும் உணவு உற்பத்தி செலவு அதிகரிப்பதை நாம் காணலாம்.கோழிப்பண்ணையில் அச்சுறுத்தல் இன்னும் அதிகமாக உள்ளது, ஏனெனில் டெல்லியில் கோழியின் விலையும் சரிந்துள்ளது. பயத்தின் காரணமாக பண்ணை தொழிலாளர்கள் கோழி பண்ணைகளில் வேலை செய்ய அதிக தயக்கம் காட்டுவார்கள்,

உலகளாவிய விதைத்துறை உலகளாவிய உற்பத்தி பிராந்தியங்களின் விநியோகச் சங்கிலியை வெகுவாக சார்ந்துள்ளது. மேலும் எந்த நாடும் விதை உற்பத்தியில் தன்னிறைவோடு இல்லை. துறைமுகங்களை மூடுவது, விதை ஏற்றுமதிகளை முடக்குவது போன்றவை இந்த ஆண்டின் பிற்பகுதியில் விவசாய உற்பத்தித்திறனைக் குறைக்கும்.

உலகெங்கிலும், மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்கள் வசந்தகால பயிர்களான மக்காச்சோளம், சூரியகாந்தி, சோயாபீன், கனோலா, கோதுமை மற்றும் பார்லி, காய்கறிகள் போன்றவை பூமத்திய ரேகைக்கு வடக்கே மற்றும் தெற்கே இலையுதிர் பயிர்களை நடவு செய்வதற்கு மிக முக்கியமான நேரம்.

இந்தியாவிலும், ஜைட் பருவ பயிர் சாகுபடி விரைவில் தொடங்கவுள்ளது. விவசாயிகளுக்கு விதைகள் தாமதமாக வழங்கப்படுவதாலோ அல்லது விதைகள் இல்லாததாலோ விவசாயம் தாமதமாகி இந்த பருவத்தை தவறவிட்டால், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஒரு தீவிரமான உணவு மற்றும் தீவன பற்றாக்குறை மற்றும் உணவு விலை பணவீக்கத்தை நாம் சந்திப்போம்.

“உணவு மற்றும் விதைகள் மூலமாக வைரஸ் பரவுகிறது என்பதற்கு தற்போது எந்த ஆதாரமும் இல்லை. சமீபத்தில் வைரஸால் மாசுபடுத்தப்பட்ட மேற்பரப்புகள் வழியாக பரவுதல் ஸ்மியர் நோய்த்தொற்றுகள் மூலம் சாத்தியமாகும். இருப்பினும், சுற்றுச்சூழலில் கோவிட்-19 வைரசின் ஒப்பீட்டளவில் குறைந்த நிலைத்தன்மை காரணமாக, மாசுபட்ட பின்னர் ஒரு குறுகிய காலத்தில் மட்டுமே இது நிகழ வாய்ப்புள்ளது” என்று சர்வதேச விதை கூட்டமைப்பு, ஐரோப்பிய உணவு பாதுகாப்பு ஆணையம், நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் மற்றும் ஜெர்மனியின் பேரிடர் மதிப்பீட்டிற்கான கூட்டு நிறுவனம் ஆகியவை சமீபத்திய ஒரு அறிக்கையில் மேற்கோள் காட்டியிருந்தாலும், இதன் பொருள் என்னவென்றால், வைரஸ் கிருமி விதைகள் மூலமாக பரவ எந்த ஆதாரமும் இல்லை என்பது தான், எனவே நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

பயத்திற்கு பயம் தர வேண்டும்

இதுபோன்ற கடினமான காலங்களில், தைரியம் மற்றும் உண்மைக்கு அழைப்பு விடுங்கள். தகவலறிந்த மற்றும் விஞ்ஞான சான்றுகளை அடிப்படையாகக் கொண்ட முடிவுகளை நாம் எடுக்க வேண்டும். அப்போது தான் கோவிட்-19 நமது ஆரோக்கியத்தை மட்டுமல்ல, நமது விவசாயத்தையும் அச்சுறுத்துகிற மற்றொரு அரக்கனாக உருவாகாது.

இந்திய அரசாங்கமும் உலகின் பிற அரசாங்கங்களும் விதைகள் உள்ளிட்ட விவசாய பொருள்களுக்கு எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்கக்கூடாது. விதை நிறுவனங்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் ஏற்றுமதியில் ஈடுபடும் தொழிலாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக்கு பொறுப்பேற்கவேண்டும். ஏற்றுமதி மற்றும் மக்களை வெளியேற்றுவதற்கான மிகப்பெரிய பணிகள் காரணமாக துறைமுக அதிகாரிகள் கடுமையான மாதங்களைக் சந்தித்துள்ளனர், இதற்கு அவர்களுக்கு உதவ வேண்டும்.

இந்த வைரஸ், நபருக்கு நபர் பரவுகிறது, எனவே சமீபத்திய உலக சுகாதார அமைப்பின் உத்தரவுகளை ஒளிபரப்ப வேண்டும், மக்களும் தொழிலாளர்களும் அவற்றைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும். விதை ஏற்றுமதி காரணமாக வைரஸ்கள் பரவுவதற்கான ஆபத்து மிகக் குறைவு, எனவே நிறுத்தவோ தாமதிக்கவோ கூடாது. இந்த நெருக்கடி நேரத்தில் கோவிட்-19 வைரஸை எதிர்த்து மட்டுமல்ல, பயத்தையும் எதிர்த்து உலகம் ஒன்று சேர வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.