ETV Bharat / bharat

'இந்தியா-சீனா இடையே போர் மூளாது... ஆனால் பதற்றம் தணியப் போவதில்லை' - லடாக் விவகாரம் பின்விளைவு

கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா-சீனா இடையே நடந்த பயங்கர மோதல் மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் விளைவாகப் போர் மூளாது எனக் கருதும் அரசியல் நிபுணர்கள், அதே வேளையில் இருநாட்டுக்கும் இடையேயான பதற்ற நிலை விரைவில் தணிய வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர்.

Breaking News
author img

By

Published : Jun 18, 2020, 3:39 AM IST

லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் ஏற்பட்ட பயங்கர மோதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து சீனாவைப் பழிவாங்க வேண்டும் என குரல் எழுந்த நிலையில், இந்திய அரசு எதுவும் பேசாமல் மௌனம் காத்துவந்தது.

ஞாயிறு அன்று நடந்த மோதலின்போது இருதரப்பும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தவில்லை என இந்திய ராணுவம் கூறியுள்ளது. அதேவேளையில், இந்திய ராணுவம் தங்கள் மீது அத்துமீறித் தாக்குதல் நடத்தியதாகக் குற்றம்சாட்டியுள்ள சீனா, அதன் தரப்பில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது குறித்து வாய் திறக்கவில்லை. 1975ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய-சீன மோதலில் உயிரிழப்புகள் நடப்பது இதுவே முதல்முறையாகும். இதன் எதிரொலியாகப் போர் மூளாது என்றாலும், பதற்ற நிலையைத் தவிர்ப்பது கடினம் என்று கூறப்படுகிறது.

கடந்த ஒரு மாதமாக 3,380 கி.மீ. நீளம் கொண்ட 'லைன் ஆஃப் ஆக்சுவல் கன்ட்ரோல்' என்றழைக்கப்படும் உண்மையான எல்லைக் கோடு அருகே இருதரப்பைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். கல்வானில் நடந்த மோதலின்போது வெறும் கைகலப்பும், கல்லெறிதலும் நடத்ததாக ராணுவ அலுவலர் ஒருவர் கூறினார். இந்த மோதலையடுத்து கல்வான் பகுதியிலிருந்து இருநாட்டுத் துருப்புகளும் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் குறித்து இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கர்னல் அமன் ஆனந்திடம் கேட்டபோது அவர் இதற்குப் பதிலளிக்கவில்லை.

'தி வில்சன் சென்டர்' என்ற ஆய்வு நிறுவனத்தின் ஆசியத் திட்ட இயக்குநர் ஆப்ரஹாம் டென்மார்க் கூறுகையில், "இந்த மோதல் இந்திய-சீன உறவிலும், இந்திய-பசிபிக் புவி அரசியலிலும் திருப்புமுனையை ஏற்படுத்தக் கூடும். அமெரிக்காவின் செல்வாக்கு மங்கிவரும் வேளையில், அணு ஆயுத வல்லமை கொண்ட இரு தேசியவாத சக்திகள் மோதிக்கொள்வது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தலாம்" என்றார்.

வடகிழக்கு இந்தியாவில் உள்ள 90 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட நிலப்பகுதியை சீனா உரிமை கொண்டாடிவருகிறது. அதேநேரம், அக்சாய் சீன் பீடபூமியில் உள்ள 38 ஆயிரம் சதுர கி.மீ. அளவிலான இந்திய நிலப் பகுதியைச் சீனா ஆக்கிரமித்துள்ளதாக இந்தியா கூறுகிறது. கடந்த ஆண்டு (2019) லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக மத்திய அரசு அறிவித்தது. இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த நாடுகளில் சீனாவும் ஒன்று. இந்தப் பிரச்னையை ஐநா பாதுகாப்பு கவுன்சில் உள்ளிட்ட சர்வதேச அரங்குகளிலும் சீனா எடுத்துச் சென்றது.

இந்திய-சீன மோதல் குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா, பொறுமையைக் கையாளுமாறு இருதரப்பினரையும் வலியுறுத்தியுள்ளது. ஆனால், இந்திய-சீன இடையே போர் மூள வாய்ப்பில்லை எனக் கூறும் 'தி வில்சன் சென்டர்' ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த தென் ஆசிய அரசியல் நிபுணர் மைக்கேல் குகேல்மான், பதற்றம் விரைவில் தணியும் என்று நினைப்பது முட்டாள்தனம் என எச்சரித்துள்ளார்.

வரும் காலங்களில் இந்திய-சீன உறவை எப்படி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்பது குறித்து அரசியல்வாதிகளும், ராணுவத்தினரும் சரியான திட்டத்தை வகுக்க வேண்டியது அவசியம் என முன்னாள் இந்தியத் தூதர் விவேக் கட்ஜு தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 'அமைதியின் மொழி புரியவில்லை என்றால், உணரும் வகையில் இந்தியா பதிலடி கொடுக்கும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.