ஜம்மு-காஷ்மீரின் காவல் துணை கண்காணிப்பாளர் தவீந்தர் சிங், தடைசெய்யப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த நவீத் பாபு, வழக்குரைஞர் இர்பான் மிர் ஆகியோர் தெற்கு காஷ்மீரில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடமிருந்த ஆயுதங்களையும் காவல் துறையினர் கைப்பற்றினர். பயங்கரவாத அமைப்புடன் தவீந்தர் சிங்குக்கு தொடர்பு இருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில், இது தொடர்பான வழக்கை தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததல் அவருக்கு டெல்லி நீதிமன்றம் பிணை வழங்கியது. இந்நிலையில், பயங்கரவாத தடுப்பு காவலர்கள் அவர் மீது பல்வேறு வழக்குகளை பதிந்தனர். இதனால், அவர் பிணை கிடைத்தும் வெளியே வரமுடியவில்லை.
இந்தச் சூழ்நிலையில், தேவிந்தர் சிங் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்பு என்ஐஏ குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது. தவீந்தர் சிங் உள்ளிட்ட ஆறு பேர் மீது தேசிய புலனாய்வு முகமை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்துள்ளது.
குற்றப்பத்திரிக்கையில், பாகிஸ்தான் தூதரகத்திலிருந்து உயர் அலுவலர்கள் சிலருடன் சமூக வலைதளங்களில் தேவிந்தர் சிங் தொடர்பில் இருந்தார். நீண்ட காலமாகவே பயங்கரவாதிகளுடன் அவர் தொடர்பில் இருந்தார். அவர்களுக்கு ஆயுதங்களை கடத்த அவர் உதவி புரிந்துள்ளார்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: டெல்லியில் ஒரு லட்சத்தை கடந்த கரோனா பாதிப்பு!