ETV Bharat / bharat

மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தான் - வீழ்ச்சியைச் சந்திக்கும் காங்கிரஸ்? - வீழ்ச்சியை சந்திக்கும் காங்கிரஸ்?

டெல்லி: மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து ராஜஸ்தானில் அரசியல் குழப்பம் நீடித்து வருவதாக அரசியல் வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

Rajasthan
Rajasthan
author img

By

Published : Mar 10, 2020, 6:10 PM IST

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 22 எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து, ஆட்சி அமைக்க 104 எம்எல்ஏக்கள் இருந்தால் போதுமானது. பாஜகவுக்கு 107 எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளதால், அக்கட்சி அங்கு ஆட்சி அமைக்க அதிக வாய்ப்புள்ளது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்வது உறுதியான நிலையில், பாஜக தனது பார்வையை ராஜஸ்தான் மாநிலத்தின் பக்கம் திருப்பியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தில் சிந்தியா, கமல் நாத் ஆகியோருக்கிடையே பனிப்போர் நீடித்து வருவதுபோல், ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதலமைச்சர் சச்சின் பைலட் ஆகியோருக்கிடையே பிரச்னை இருந்து வருகிறது.

வைர வியாபாரி ராஜிவ் அரோராவை மாநிலங்களவைக்கு அனுப்ப அசோக் கெலாட் விரும்பினார். ஆனால், கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்த்து, மற்றவர்களை மாநிலங்களவை உறுப்பினராக்கினால் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் எனக் கூறி, அதற்கு சச்சின் மறுப்பு தெரிவித்தார்.

இதேபோல், கோடா அரசு மருத்துவமனையில் குழந்தைகள் இறந்த விவகாரத்தை சச்சின் கடுமையாக விமர்சித்திருந்தார். இதுபோல் பல விவகாரங்களில், கெலாட், சச்சின் இடையே மாற்றுக்கருத்துகள் நிலவிவருகிறது.

ராஜஸ்தானில் ஆட்சி நடத்த 100 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு இருந்தால் போதுமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள், ஆர்.எல்.டியைச் சேர்ந்த ஒருவர் என 112 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவோடு காங்கிரஸ் அங்கு ஆட்சி நடத்தி வருகிறது.

பாஜகவுக்கு 80 சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளனர். இன்னும் 20 சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஆதரவு பாஜகவுக்கு திரும்பினால் அங்கும் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை ஏற்படும்.

இதையும் படிங்க: ‘சிந்தியா நீக்கம்’ - காங்கிரஸ் பொதுச்செயலாளர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.