ETV Bharat / bharat

கடும் எதிர்ப்புகளுக்குப் பிறகு கருத்தை வாபஸ் பெற்ற ஓவைசி கட்சிக்காரர் - கருத்தை வாபஸ் பெற்ற ஓவைசி கட்சித் தலைவர்

மும்பை: சிஏஏ எதிர்ப்புப் பேரணியில் இனவாதம் பேசியதாகக் கூறி, கடும் எதிர்ப்பலைகள் எழுந்ததையடுத்து அகில இந்திய மஜ்லிஸ்-இ- இடிஹதுல் முஸ்லிம் கட்சித் தலைவர் வாரிஸ் பதான், தான் கூறிய கருத்தைத் திரும்பப்பெற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

I take back my words - Waris Pathan
I take back my words - Waris Pathan
author img

By

Published : Feb 23, 2020, 12:16 PM IST

குடியுரிமை திருத்தச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இடிஹதுல் முஸ்லிம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைசி முற்றிலுமாக எதிர்த்து வருகிறார். சட்டம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, பெங்களூரு, ஹைதராபாத் போன்ற முக்கிய நகரங்களில், சிஏஏ எதிர்ப்புக் கூட்டங்களையும் அவர் நடத்தி வருகிறார்.

அந்த வகையில், பெங்களூரு அருகே கல்புர்கியில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி அக்கட்சி சார்பில் பேரணி நடைபெற்றது. இக்கூட்டத்தில், ஓவைசி, வாரிஸ் பதான் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய வாரிஸ் பதான், 'இந்தியாவிலுள்ள 15 கோடி இஸ்லாமியர்கள் ஒன்றிணைந்தால், 100 கோடி மக்களைக் காட்டிலும் பெரிய சக்தியாக உருவெடுப்போம்' என்றார்.

அவரின் இந்தப் பேச்சுக்கு, பாஜக தலைவர்கள், இந்து அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். மேலும், கூட்டத்தில் தன் கட்சித் தலைவர் ஒருவர் இனவாத அடிப்படையில் பேசும்போது, ஓவைசி மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது வருத்தமளிப்பதாகவும் கூறினர். இந்த விவகாரம் பெரிதாகவே பதானை மறு உத்தரவு வரும் வரை, செய்தியாளர்களிடம் பேசக் கூடாது என ஓவைசி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இனவாதம் பேசியதாகக் கூறி, பதான் மீது முதல் தகவல் அறிக்கையை (எப்ஐஆர்) கல்புர்கி காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். மேலும், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசுதல், இரு பிரிவினர் இடையே மோதலை உருவாக்குதல் (153ஏ) ஆகிய இரு சட்டப்பிரிவுகளின் கீழ், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விளக்கமளித்த பதான், தானோ அல்லது தான் சார்ந்த கட்சியோ மக்களை சாதி, மத ரீதியாகவோ பிளவுபடுத்துவதை ஒருபோதும் ஊக்குவிப்பதில்லை எனக் கூறியுள்ளார். தான் பேசிய கருத்து முற்றிலும் வேறு விதமாக புரிந்துகொள்ளப்பட்டதாகவும், அவர் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் பதான் தான் கூறிய கருத்தைத் திரும்பப்பெற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். இந்துக்களின் மனதைப் புண்படுத்துவது தனது நோக்கமல்ல என்று கூறியுள்ள அவர், தான் இந்துக்களுக்கு எதிரானவர் அல்ல என விளக்கமளித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் தன்னை தேசவிரோதியாகச் சித்தரிக்க முயல்வதாகக் கூறிய அவர், மக்களிடையே பாகுபாட்டை ஏற்படுத்தும் இனவாதமாகப் பேசவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: வருகிற 7ஆம் தேதி அயோத்தி செல்கிறார் உத்தவ் தாக்கரே!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.