இதுகுறித்து, உள்ளூர் காவல் துறை தலைவர் ஹபிபுராஹ்மான் மாலேக்ஸாடா ஊடகங்களுக்கு கூறும்போது,"சிறுமியின் பெற்றோர் அரசுக்கு ஆதரவாளராக இருந்தார். இதனால், தலிபான் பயங்கரவாதிகள் அவரது வீட்டிற்கு சென்று அவரை வெளியே இழுத்து சென்றனர்.
ஆனால் அவர் வரமறுத்ததால் அவரை வெளியே இழுத்து வந்த பயங்கரவாதிகள் வீட்டின் முன்னர் அவரையும் அவரது மனைவியையும் சுட்டுக்கொன்றுள்ளனர்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சிறுமி கமர் குல், வீட்டில் இருந்த ஏ.கே. 47 துப்பாக்கியை எடுத்து வந்து தனது பெற்றோரை கொன்ற இரண்டு பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றுள்ளார். மேலும் அங்கு காவலுக்கு இருந்த பயங்கரவாதிகள் சிலரையும் காயப்படுத்தியுள்ளார்" என கூறினார்.
பின்னர், பல தலிபான் போராளிகள் அவரது வீட்டைத் தாக்க வந்தனர். இதனை அடுத்து அங்கு வந்த பாதுகாப்புப் படையினர் தலிபான்களை விரட்டியடித்துள்ளனர்.
அந்த சிறுமியையும் உறவினர்களையும் பாதுகாப்பான இடத்திற்கு ராணுவத்தினர் அழைத்துச் சென்றுள்ளனர்.