புதுச்சேரி விவசாயத் துறையின் சார்பில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் விவசாயத் துறையில் நிலவும் சூழ்நிலைகள் குறித்தும் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் விவசாயத் துறை அமைச்சர் கமலக்கண்ணன், தலைமைச் செயலாளர் அஸ்வின் குமார், நிதிச் செயலர், விவசாயத் துறை செயலாளர், துறை இயக்குநர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
மேலும், இக்கூட்டத்தில் நெல் கொள்முதல் செய்வது சம்பந்தமாகவும் ஏற்கனவே அரசிடம் உள்ள நெல் இருப்பு குறித்தும்; அதற்கு நிதி ஒதுக்குவது சம்பந்தமாகவும் விவாதிக்கப்பட்டு ஆலோசனை வழங்கப்பட்டது.
இதையும் படிங்க:திருமண நிச்சய விழாவில் திருடிய நபருக்கு போலீஸ் வலைவீச்சு!