பெரியவர்கள் தற்போது செய்யும் தவறுகளுக்கு அடுத்த தலைமுறை குழந்தைகள் அதிக விலை கொடுக்கப் போகிறார்கள். ஆம், அவர்கள் தாங்க முடியாத வெப்பநிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இது அவர்களின் ஆரோக்கியத்தை கடுமையாக பாதிக்கும். சமீபத்திய ஆய்வின்படி, உலகளவில் காலநிலை மாற்றம் காரணமாக ஒரு முழு தலைமுறை குழந்தைகள் பாதிக்கப்பட உள்ளனர். அதிலும் குறிப்பாக இந்தியாவில் குழந்தைகள் அதிக துன்பங்களைச் சந்திப்பார்கள்.
புதைபடிவ எரிபொருள் பயன்பாடு மற்றும் உலக வெப்பநிலை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் உணவு பற்றாக்குறை, தொற்றுநோய்கள், வெள்ளம் மற்றும் வெப்ப அலைகள் உக்கிரம் அடையும். இந்த ஆய்வில் உலக சுகாதார அமைப்பு மற்றும் உலக வங்கியுடன் இணைந்து நடத்தியது. இதில் 35 அமைப்புகளைச் சேர்ந்த 120 நிபுணர்கள் பங்கேற்றனர். இந்த அறிக்கைகள் புகழ்பெற்ற அறிவியல் இதழான, “தி லான்செட்”டில் வெளியாகின. காலநிலை மாற்றத்திற்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொண்டபடி உலக வெப்பநிலை இரண்டு டிகிரி செல்சியஸ் ஆக குறைக்கப்பட வேண்டும்.இல்லாவிட்டால் வரும் தலைமுறையினர் கவனக்குறைவாக பாதிக்கப்படுவார்கள்.
தற்போதைய நிலவரப்படி இந்த பிரச்னை குழந்தைகளுக்கு காணப்படுகின்றது. கார்பன் உமிழ்வின் தற்போதைய சூழ்நிலை தொடர்ந்தால், தற்போதைய தலைமுறை குழந்தைகள் 71 வயதாகும் போது உலக வெப்பநிலையில் 4 டிகிரி செல்சியஸ் உயர்வைக் காண்பார்கள். வெப்பநிலை உயர்வு மற்றும் மழையின் வடிவத்தில் மாற்றம் டெங்கு போன்ற நோய்களின் பரவலான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும். இன்றைய நிலவரப்படி, உலக மக்கள் தொகையில் பாதி பேர் இந்த நோய் அபாயத்தை எதிர்கொள்கின்றனர்.
நுரையீரல், இருதயம் மற்றும் நரம்பியல் வியாதிகளுக்கும் வரும். கடந்த 30 ஆண்டுகளில் குழந்தைகளிடையே வயிற்றுப்போக்கு நோய்த்தொற்று இரு மடங்குகளாக அதிகரித்துள்ளது. அடுத்து பிறக்க போகும் குழந்தைகளுக்கு இந்த பிரச்னைகள் அதிகமாக வர வாய்ப்புகள் அதிகம்.
இந்தியாவில் காட்டுத் தீ இதுவரை 2.1 கோடி மக்களின் வாழ்க்கையை அழித்துள்ளது. இந்தியா போன்ற நாடுகள் காலநிலை மாற்றத்தின் சுமைகளை முதலில் தாங்கும். ஏனெனில் இந்தியாவின் பூகோள கட்டமைப்பு, அவ்வாறானது. இதற்கிடையில் இந்தியாவில் வயிற்றுப் போக்கு நோய், இறப்பு விகிதம் அதிகரித்து வருவதாக ஆராய்ச்சியாளர் பூர்ணிமா பிரபாகரன் கூறுகிறார்.
2015ஆம் ஆண்டில் ஆயிரக்கணக்கான உயிர்களைக் கொன்ற வெப்ப அலைகள் எதிர்காலத்தில் ஒரு பொதுவான நிகழ்வாக மாறும். புவி வெப்பமடைதல் நம் குழந்தைகளின் உயிரைப் பறிக்கப் போகிறது. நாம் உடனடியாக செயல்படவில்லை என்றால், வருங்கால சந்ததியினருக்கு துன்பத்தை ஏற்படுத்தியதற்கு நாமும் பொறுப்பாவோம்!
இதையும் படிங்க: 2100இல் இமயமலையில் முக்கால்வாசி இருக்காது!