புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் பொறுப்பேற்ற காங்கிரஸ் அரசு மாதத்தோறும் புதுச்சேரியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு 20 கிலோ இலவச அரிசி வழங்கும் என அறிவித்திருந்தது.
இதற்காக ஒவ்வொரு ஆண்டும் நிதிநிலை அறிக்கையில், இலவச அரிசி அல்லது அரிசிக்குரிய பணம் வழங்குவதற்கென நிதியும் ஒதுக்கிவருகிறது. ஆனால், இதுவரை மக்களுக்கு வழங்க வேண்டிய 45 மாத காலத்திற்கான இலவச அரிசியில் 23 மாதங்கள் மட்டுமே அரிசியாகவோ அல்லது பணமாகவோ வழங்கியுள்ளது.
மீதமுள்ள 22 மாதங்களுக்கு மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியோ அல்லது அதற்குரிய பணத்தையோ வழங்காமல் காங்கிரஸ் அரசு மக்களை ஏமாற்றிவருகிறது. உடனடியாக இந்த 22 மாதங்களுக்கான பணத்தை அரசுப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டும். அப்படி வழங்கவில்லையெனில் புதுச்சேரி அதிமுக சார்பில் மக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடும்.
திமுக துணையோடு புதுச்சேரியை ஆளக்கூடிய இந்தக் காங்கிரஸ் அரசு தொடர்ந்து மக்கள் விரோதப்போக்கினைக் கடைப்பிடித்துவருகிறது. இன்று அரசை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டுவரும் திமுக, உண்மையாகவே மக்கள் மீது அக்கறை கொண்டிருந்தால் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு தெரிவித்துவரும் ஆதரவைத் திரும்பப் பெறுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க : 'இது கண்ணியமற்ற அரசியல்' - கொதிக்கும் பிரகாஷ் ஜவடேகர்!