ETV Bharat / bharat

“புதுச்சேரி முதலமைச்சர் ‘ஷோ’ காட்டுகிறார்” - சாடிய அதிமுக எம்எல்ஏ!

புதுவை: "ஒரு நாள் செய்திக்காக முதலமைச்சர் நாராயணசாமி 'ஷோ' காட்டி வருகிறார்" என்று, அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

admk mla anbazhagan
author img

By

Published : Jun 8, 2019, 5:17 PM IST

இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “மின் கட்டணத்தை குறைக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசாதது ஏன்? வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்ய பாருங்கள். அரசு ஊழியர்கள் மத்தியில் ஒழுங்கீனம் தலைவிரித்தாடுகின்றது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை. ஒரு நாள் செய்திக்காக முதலமைச்சர் நாராயணசாமி ஷோ காட்டி வருகிறார்.

மாநிலத்தில் வருவாய் பெருகுவதற்கு எதையும் இந்த அரசு செய்யவில்லை. போராட்டம் நடத்துவது தனது உரிமை என்று பேசிவரும் முதலமைச்சர் சாப்பாட்டுக்கு வழியில்லாமல் 18 மாதங்களாக சம்பளம் போடாத தவறை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கின்றனர். ஆனால், இவர் துணைநிலை ஆளுநரை எதிர்த்து போராடவுள்ளதாக பேசியுள்ளார். இவருக்கு மட்டும் போராட்டம் நடத்த எப்படி உரிமை உள்ளது?

அதிமுக சட்டப்பேரவை கட்சித் தலைவர் அன்பழகன் செய்தியாளர் சந்திப்பு

அரசாங்கத்தின் நிர்வாகம், அரசாங்கத்தின் அன்றாட பணிகள், அரசின் அமைச்சரவை விஷயங்கள் இதையெல்லாம் முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம் என்கிற நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது. இதற்கு ஆளுநரும், முதலமைச்சரும்தான் காரணம். இச்சம்பவம் வேதனைக்குரிய விஷயமாகும். இவர்கள் இருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளால் புதுச்சேரி மாநில அரசு நிர்வாகம் சீரழிந்துள்ளது” என்று கடுமையாக சாடினார்.

Intro:Body:

முதல்வர் மற்றும் ஆளுநர் இவர்களின் தனிப்பட் ட விருப்பு, வெறுப்பு சம்பவங்களால் புதுச்சேரி  அரசு நிர்வாகம் சீரழிந்துள்ளது உள்ளது என்று

அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவர் அன்பழகன் குற்றம் சாட்டினார்

இது தொடர்பாக  சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள அவரது அறையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனை தெரிவித்தார்.

 மேலும் பேசிய அவர் ,

 மின் கட்டணத்தை குறைக்க நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பேசாதது ஏன்?

வாக்களித்த மக்களுக்கு நன்மை செய்யப்பாருங்கள்..

அரசு ஊழியர்கள் மத்தியில்  ஒழுங்கீனம் தலைவிரித்தாடுகின்றது.அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு திராணி இல்லை ,என்றும் கூறிய அவர்

ஒரு நாள் செய்திக்காக முதல்வர் நாராயணசாமி Show காட்டி வருகின்றார் என்றார்

 வேலைவாய்ப்புகளை உருவாக்கவில்லை என்றும் மாநிலத்தில் வருவாய் பெறுவதற்கு எதையும் தனது அரசு செய்யவில்லை என்றும் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தை முதல்வர் நாராயணசாமி அளித்துள்ளார் 

போராட்டம் நடத்துவது தனது உரிமை என்று பேசிவரும் முதல்வர் 

சாப்பாட்டுக்கு வழியில்லாமல் 18 மாதமாக சம்பளம் போடாத தவற்றை சுட்டிக்காட்டி அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தினால் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கின்றனர் . ஆனால் இவர் துணைநிலை ஆளுநரை எதிர்த்து  போராடவுள்ளதாக பேசியுள்ளார்  இவருக்கு மட்டும்  போராட்டம் நடத்த எப்படி உரிமை உள்ளது என்றார்.

மாநில வருவாய் பெருக்காமல் இந்த மூன்று ஆண்டுகளாக எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகள் கூட கேட்காமல் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

அரசாங்கத்தின் நிர்வாகம், அரசாங்கத்தின் அன்றாட பணிகள், அரசின் அமைச்சரவை விஷயங்கள் இதையெல்லாம் முடிவு செய்யவேண்டியது நீதிமன்றம் என்கிற நிலைக்கு புதுச்சேரி தள்ளப்பட்டுள்ளது இதற்கு ஆளுநரும், முதல்வர் தான் காரணம் இச் சம்பவம் வேதனைக்குரிய விஷயமாகும்

இவர்கள் இருவரின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு சம்பவங்கள் புதுச்சேரி மாநில அரசு நிர்வாகம் சீரழிந்துள்ளது உள்ளது

அதிமுக சட்டமன்றக்கட்சித்தலைவர் அன்பழகன் பேசினார்

FTP :   TN_PUD_1_8_ADMK_ANBALAGAN_BYTE_7205842

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.