ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் நல கூட்டமைப்பினர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தினர். கடந்த மூன்று நாட்களாக நடந்துவரும் போராட்டத்திற்கு பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி சுதேசி மில் அருகே நடைபெற்ற போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அன்பழகன், மணிகண்டன் ஆகியோர் இன்று பங்கேற்றனர். அப்போது அதிமுக எம்எல்ஏ அன்பழகன் போராட்டத்தின் நோக்கம் குறித்து மைக்கில் பேசத்தொடங்கியபோது, அவரை பேசவிடாமல் காவல் துறையினர் தடுத்துள்ளனர்.
இதையடுத்து, புதுச்சேரி - கடலூர் சாலையில் போராட்டக்காரர்களும் அன்பழகன் எம்எல்ஏ தலைமையிலான கட்சியினரும் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், காவல் துறை உயர் அதிகாரிகள் அன்பழகனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் போராட்டம் கைவிடப்பட்டது.
இதையும் படிங்க: ஜெயலலிதாவுக்கு சிலை வைக்க மறுத்த அரசு: கேள்வி எழுப்பும் எம்எல்ஏ!